மாறுபட்ட வேடம்; நாகர்ஜூனாவுடன் இணைந்து அசத்தும் தனுஷ் - வெளியானது "குபேரா" பட கிலிம்ப்ஸ்!

Nov 15, 2024, 6:12 PM IST

தமிழில் தான் இரண்டாவது முறையாக இயக்கிய ராயன் திரைப்பட வெற்றிக்கு பிறகு, தற்பொழுது "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படத்தையும், "இட்லி கடை" என்கின்ற படத்தையும் நடிகர் தனுஷ் இயக்கி வருகிறார். இதற்கு இடையில் தெலுங்கு திரை உலகின் சேகர் கம்முலா என்பவர் இயக்கும் "குபேரா" என்கின்ற திரைப்படத்தில் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் நாகார்ஜுனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இப்போது அந்த திரைப்படத்தின் க்ளிம்ஸ் காட்சி ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வருகிறது.