70-வது வயதில் இருந்து 20 வது! சமந்தா கலக்கியுள்ள 'ஓ பேபி' டீஸர்!

By manimegalai a  |  First Published May 25, 2019, 5:30 PM IST

பெண் இயக்குனர் கே.வி. நந்தினி இயக்கத்தில், சமந்தா 70 வயது கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஓ பேபி. கடந்த 2014 ஆண்டு கொரியன் மொழியில் வெளியான மிஸ் கிராணி படத்தின் தெலுங்கு ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
 
Tap to resize

Latest Videos

undefined

70 வயது பாட்டி வேடத்தில் நடிகை லட்சுமியும், 20 வயது கேரக்டரில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளனர். மேலும் ஊர்வசி, ராவ் ரமேஷ், நாக சவுரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு போட்டோ ஸ்டுடியவிற்கு செல்லும் 70 வயது பாட்டி, மந்திர சத்திகள் மூலம் 20 வயது பெண்ணாக மாறுகிறார். பின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷான் பணிகளில், படக்குழுவினர் கவனம் செலுத்தி வந்தனர்.  தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

click me!