நாக தோஷம்னா சும்மா போச்சா...? திகிலூட்டும் பாம்பு... மூன்று நடிகைகள் போட்டி போட்டு நடித்துள்ள 'நீயா 2' ! ட்ரைலர்

By manimegalai a  |  First Published May 4, 2019, 4:13 PM IST

ஆம் ஆண்டு மனித உருவத்திற்கு மாறும் பாம்பின் கதையை மையமாக வைத்து எடுத்த படம் 'நீயா' இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது.
 


நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் கடந்த 1979 ஆம் ஆண்டு மனித உருவத்திற்கு மாறும் பாம்பின் கதையை மையமாக வைத்து எடுத்த படம் 'நீயா' இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது.

இயக்குனர் துரை இயக்கி இருந்த இப்படத்தில், தன்னுடைய கணவரை கொன்ற, மனிதர்களை பாம்பு பழிவாங்குவது தான் கதை.

Tap to resize

Latest Videos

undefined

இப்படம் வெளியாகி 40 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகமாக போல் உருவாகியுள்ளது 'நீயா 2 ' இதில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இதிலும் பாம்பு பழி வாங்குவதையே மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் எல்.சுரேஷ் இயக்கியுள்ள இந்த படத்தை, ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க, ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்

இந்த நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரைலரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

 

click me!