திருவள்ளூரில், தடைச் செய்யப்பட்ட குட்காப் பொருட்களை குடோன்களில் பதுக்கி வைத்திருந்த வடமாநிலத்தவர் உள்பட ஐந்து பேரை காவலாளர்கள் கைது செய்தனர். தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் பிடிப்பட்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில், தடைச் செய்யப்பட்ட குட்காப் பொருட்களை குடோன்களில் பதுக்கி வைத்திருந்த வடமாநிலத்தவர் உள்பட ஐந்து பேரை காவலாளர்கள் கைது செய்தனர். தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் பிடிப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், நேற்று முன்தினம் திருவள்ளூர் நகர காவலாளர்கள் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது அங்குள்ள மூன்று கிடங்குகளில் தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை காவலாளர்கள் கண்டுப்பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 500 கிலோ தடைச் செய்யப்பட்ட குட்காப் பொருட்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் குட்காப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த சதாராம், கடையில் வேலை பார்த்த வடமாநில இளைஞர் விக்ரம், மற்றொரு கடையின் உரிமையாளர் முருகேசன், அவருடன் வேலை செய்துவந்த ராஜா மற்றும் டில்லிபாபு ஆகிய ஐவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
குட்காப் பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது? இன்னும் இதில் யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளனர்? என்று துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.