
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது 2ஆவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அப்பா மகன் உறவை மையப்படுத்திய தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக குடும்பத்தில் மகன்கள் தான் கூட்டுக் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். மருமகள்கள் தனிக்குடித்தனம் போவதற்கு பிடிவாதமாக இருப்பார்கள். இதுதான் காலங்காலமாக எல்லோரது குடும்பத்திலும் நடக்கிறது. இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில குடும்பங்களைத் தவிர.
ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலைப் பொறுத்த வரையில் பாண்டியனின் மருமகள் மீனா கூட்டுக்குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில், பாண்டியனின் மகன் செந்தில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது வீட்டிலிருந்து விலகி மாமனார் வீட்டில் செல்லாகிவிட்டார் என்று தோன்றுகிறது. இதே போன்று மீனா தனது மாமனார் குடும்பம் தான் உலகம் என்று பாசமழை பொழிகிறார்.
ஷார்ட் பிரேக்குக்கு பின் மீண்டும் தமிழில் பிஸியான அழகு ராட்சசி ஆஷ்னா சவேரி!
இந்த நிலையில், தான் தனது தனிக்குடித்தனம் முடிவு குறித்து அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன் என்று மாமனாரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து மீனாவின் அப்பா கொஞ்சம் ஆறுதலாக பேசினார். இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது. இதில், நீ மட்டும் ஏன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று கேட்கவில்லை என்று ராஜீ கேட்க, அதற்கு அப்படியெல்லாம் எனக்கு தோன்றவில்லை என்றார்.
உண்மையில் ராஜீக்கு தெரியும், குடும்பத்தில் மற்றவர்களை விட பாண்டியன் மீது அதிக பாசம் வைத்திருப்பவர் கதிர் தான். இதன் காரணமாக அவருக்கு தனியாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அப்படியே ராஜீ மற்றும் கதிர் இருவரது ரொமான்ஸ் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இறுதியாக மளிகைக் கடையில் தங்கமயில் மற்றும் மாணிக்கம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது.
பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸூக்கு கொடுக்கப்பட்ட பிரீடம்; இனிமே வேக்கப் சாங் கிடையாது!
இதில் ஒரு வாடிக்கையாளர் கடைக்கு முட்டை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வந்துள்ளார். அப்போது தங்கமயில் நான் முட்டையை எடுத்து கட்டி தருகிறேன் என்று கூறினார். சரி முட்டையை கட்டிவிடுவார் என்று பார்த்த நிலையில் முட்டையை எப்படி கட்ட வேண்டும் என்பது கூட தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார். அந்த நேரம் டீ குடித்துவிட்டு கடைக்கு வந்த தங்கையிலின் அப்பா மாணிக்கம், தான் முட்டையை கட்டுவதாக கூறி முட்டையை கட்ட முயற்சித்தார்.
அனால், முட்டையை கீழே விழுந்து உடைந்துவிட்டது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பழனிவேல் மற்றும் சரவணன் இருவரும் கடுமையான கோபத்திற்கு உள்ளாகினர். முட்டையை கட்டுவதற்கு முன் பழனிவேல் நானே கட்டிக் கொள்கிறேன் என்று இருவரிடமும் கேட்டார். ஆனால், அவரது பேச்சை யாரும் மதிப்பதாக தெரியவில்லை.