
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 20 போட்டியாளர்கள் இடம் பெற்றனர். இந்த நிலையில் தான் பிக் பாஸ் வீட்டின் முதல் நாளான இன்று என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். பிகாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் தண்ணீர் கண்ணீர் என்று இன்றைய முதல் நாளில் டாஸ்க் கொடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி முதல் நாளில் எங்க ஏரிய உள்ள வராத என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இனிமேல் பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வேக்கப் சாங் கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எழுந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தன்வினை தன்னையே சுடும்.. சௌந்தர பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் அப்டேட்
முக்கியமாக பிக் பாஸ் வீட்டில் தண்ணீர் சிக்கனம் டாஸ்க் கடைபிடிக்கப்பட்டது. நாட்டில் தண்ணிர் கிடைக்காமல் எத்தனையோ மக்கள் கஷ்டப்படும் நிலையில், அதனை வீணடிக்காமல் இருக்க சிக்கமானமாக பயன்படுத்த வேண்டும் என்ற டாஸ்க் கொண்டு வரப்பட்டது. அதோடு, அதற்கு ஒரு சூப்பர் வைசரும், அவருக்கு உதவியாளரும் நியமிக்கப்பட்டனர். பின்னர் கிச்சன், லிவிங் ஏரியா, பாத்ரூம் என்று ஒவ்வொன்றிற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நாமினேஷன் பிராசஸ் நடந்தது. இதில் பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்களுக்கு நாமினேஷன் கிடையாது.
ஆனால், அவர்களில் 3 பேருக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் ரம்யா ஜோ, துஷார் மற்றும் சுபிக்ஷா ஆகியோருக்கு நாமினேஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து மற்ற போட்டியாளர்களுக்கு நாமினேஷன் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக கலையரசன் 12 ஓட்டுகள் பெற்றார். திவாகர் 7 ஓட்டுகள் பெற பிரவீன் காந்தி 4 ஓட்டுகள் பெற்றார். இவர்களது வரிசையில் வியானா, ஆதிரை, அப்சரா, பிரவீன் ராஜ் ஆகியோர் தலா 3 வாக்குகள் பெற்றனர்.
ஷார்ட் பிரேக்குக்கு பின் மீண்டும் தமிழில் பிஸியான அழகு ராட்சசி ஆஷ்னா சவேரி!
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வெளியில் எப்படி இருந்தாரோ அப்படி தான் வீட்டிற்குள்ளேயும் இருக்கிறார். சிவாஜி கணேசன் மாதிரி நடிக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் கர்ணன் போன்று நடித்து காட்டினார். இப்படியே பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் கொஞ்சம் சைலண்டாகவே சென்றது. இனி வரும் காலங்களில் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.