மகாபாரதம் தொடரில் கர்ணனாக நடித்தவர்... கேன்சர் பாதிப்பால் உயிரிழப்பு

Published : Oct 15, 2025, 02:15 PM IST
pankaj dheer

சுருக்கம்

பி.ஆர். சோப்ராவின் 'மகாபாரதம்' தொடரில் கர்ணன் வேடத்தில் நடித்த பங்கஜ் தீர் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

Actor Pankaj Dheer Passes Away : இயக்குனர் பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான 'மகாபாரதத்தில்' கர்ணன் வேடத்தில் நடித்த பங்கஜ் தீர், புதன்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது 68. அவரது மரணச் செய்தியை 'சிண்டா' உறுப்பினர் அமித் பெஹல் உறுதிப்படுத்தியுள்ளார். தகவல்களின்படி, பங்கஜ் கடந்த சில காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார்.

அவர் அதிலிருந்து மீண்டாலும், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நோய் தீவிரமடைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்த நோய்க்காக சமீபத்தில் அவருக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பங்கஜ் தீர் காலமானார்

மகாபாரதம் என்கிற ஒரே ஒரு தொடரின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் பங்கஜ் தீர். அவர் அதில் கர்ணன் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் பங்கஜ் தீர். அந்த தொடர் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பங்கஜ் தீரின் மறைவால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு மும்பையில் உள்ள பவன் ஹன்ஸ் மயானத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷுக்கு வில்லியாக மாறிய விஜயா... அம்மாவிற்கு பயந்து முத்து எடுக்கும் அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்