
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கி வீரா இந்த வீட்டுக்கு வராமல் நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகம் வீரா இந்த வீட்டுக்கு வாழ வரமாட்டா என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிச் செல்ல இசக்கி கண் கலங்கி நிற்க அவளுக்கு பிரசவ வலி வந்து விடுகிறது. இதையடுத்து இசக்கியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகின்றனர்.
நல்ல வேளை... பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த சீரியல் நடிகையின் ஷாக்கிங் பதிவு!
பரணிக்கு போன் செய்து இசக்கி பிரசவ வலி வந்து விட்ட விஷயத்தை சொல்ல பரணி கிளம்பி வருவதாக சொல்கிறாள். அதற்குள் இசக்கி அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பரணி அங்கு வர குழந்தையை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் இசக்கி அண்ணன் வந்து என் குழந்தையை தூக்காமல் பால் கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்க பரணி சண்முகத்துக்கு போன் போட்டு வர சொல்ல அவன் நான் வரமாட்டேன் என்று மறுக்கிறான். பிறகு வீடியோ காலில் குழந்தையின் முகத்தை காட்டி இங்க பாரு உன் அம்மாவே வந்து பிறந்து இருக்கா என்று சொல்ல சண்முகம் எமோஷனலாகி கண்கலங்கி ஹாஸ்பிடல் வருகிறான்.
தனது கையால் குழந்தையை தூக்கி கொஞ்ச இசக்கி சந்தோஷம் அடைகிறாள். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பிக் பாஸ் வீட்டு தலைக்கு காத்திருக்கும் ராஜ மரியாதை... கேப்டன்சி டாஸ்க் ஜெயிச்சா இவ்வளவு சலுகைகளா?