கடும் கோபத்தில் ரேவதி - காதலை வெளிப்படுத்தினானா கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Sep 19, 2025, 04:52 PM IST
 Kathigai Deepam 2 Serial September 19th episode update

சுருக்கம்

Kathigai Deepam 2 Serial : பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் தொடரில், நேற்றைய தினம் மாயா ஸ்டேஷனில் இருந்து தப்பித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்ப்போம்.

கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு:

கார்த்திக்கு , மாயா ஸ்டேஷனில் இருந்து தப்பித்த விஷயம் தெரியவந்ததை தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பார்த்து ரசித்தபடி இருக்கிறாள். மேலும் அந்த போட்டோவை பார்த்து கார்த்தியை கொஞ்சி கொண்டிருக்க... ரூமுக்கு வந்தா அவன் இதை பார்த்து ரேவதியிடம் சத்தம் போடுகிறான். எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்கிறான்.

ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல், ரசிகர், பிரபலங்களின் கண்ணீர் கடலில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்!

இதை பார்த்துவிட்ட மயில்வாகனம் கார்த்தியிடம் எதுக்கு இப்படி கோபப்படுற என்று கேட்க கார்த்திக் ரேவதி செய்ததெல்லாம் பார்த்து என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்கிறான். சரிப்பா அந்த பொண்ணை சமாதானப்படுத்தலாம் என்று ரூமுக்கு அழைத்துச் செல்ல அங்கு ரேவதி இல்லை என்பது தெரிய வருகிறது.

நான் சர்வதேச கைக்கூலியா? கேபிஒய் பாலா வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!

ரேவதி பரமேஸ்வரி பாட்டி ரூமுக்கு வந்து படுத்து கொண்ட நிலையில் கார்த்திக் அங்கு வந்து அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறான். பிறகு ரேவதி தூங்கும் போது கார்த்திக் அவரது பக்கத்தில் உட்கார்ந்து எனக்கும் உன்னை பிடிக்கும்.. ஆனா என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கு என்று மனதுக்குள் இருக்கும் விஷயத்தை முதல் முறையாக வெளிப்படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய, கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து பாருங்கள்.

உஷார்!!! ரோபோ ஷங்கர் செத்ததே இதனால் தான்; தயவு செய்து அலட்சியப்படுத்தாதீங்க!

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!
மனைவி என்று கூட பார்க்காமல் சுகன்யாவிற்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த நியாயஸ்தன் பழனிவேல்!