
கார்த்திகை தீபம் சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இதுவரையில் சாமுண்டீஸ்வரியின் ஒவ்வொரு பிரச்சனையிலும் கார்த்திக் தான் கூடவே இருந்து அவரை காப்பாற்றியுள்ளார். இதையடுத்து சாமுண்டீஸ்வரி தனது மகள் ரேவதியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கும் கார்த்திக் யார் என்பது ரேவதிக்கு தெரியும். அவரை தவிர குடும்பத்தில் உள்ள சுவாதி, ரோகிணி மற்றும் துர்கா ஆகியோருக்கு இதுவரையில் தெரியவில்லை.
ஆளு தான் ஒல்லி... ஆனா இசையில கில்லி! இசையமைப்பாளர் அனிருத்தின் ஆச்சரியப்படுத்தும் சொத்து மதிப்பு!
இந்த சூழலில் தான் கார்த்திக்கின் நண்பனான நவீனை துர்கா காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தெரியவர இருவரையும் வீட்டைவிட்டு துரத்திவிட்டார். அவர்களுக்கு அவரது பாட்டி பரமேஸ்வரி தான் அடைக்கலம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் நவீனை கடத்தி அப்படியே உயிருடன் ஒரு பாக்ஸில் போட்டு மண்ணுக்கு அடியில் சந்திரகலாவின் அடியாட்கள் புதைத்துவிட்டனர்.
இந்தப் பலி எப்படியோ சாமுண்டீஸ்வரி மீது விழுந்தது. துர்காவிற்கும், சாமுண்டீஸ்வரிக்கும் இடையில் கலகம் உண்டானது. இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அம்மா மீதான கோபம், நவீன் மீதான காதலால் பஞ்சாயத்தை கூட்டிய துர்கா அம்மா மீது புகார் கொடுத்தார். அதன் பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவரை லாக்கப்பில் அடைக்கச் செய்தார்.
இதைத் தொடர்ந்து துர்காவை உசுப்பேத்திவிட வந்த சந்திரகலா உன்னுடைய புருஷன் இறந்துவிட்டான் என்று சொல்ல, துர்காவோ என்ன செய்வதென்று தெரியாமல் இனிமேலும் உயிருடன் இருக்க கூடாது என்று பூச்சி மருந்தை குடித்துவிட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த கார்த்திக் எப்படியாவது நவீன் உடன் பேச வைத்துவிட வேண்டும் என்று கருதி அவரது நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், சந்திரகலாவோ முதலில் அந்த எண்ணை பிளாக் செய்ய சொல்லி அந்த ரவுடியிடம் சொல்லிவிட்டார் அல்லவா. அதனால், கார்த்திக் டயல் செய்த அந்த நம்பருக்கான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் கார்த்திக் எவ்வளவோ முயற்சி செய்தாலும் நவீனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் நீண்ட நேரமாக பெட்டிக்குள்ளேயே இருப்பதால் நவீனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. நவீன் சொன்ன மணி சத்தத்தை வைத்து அவரை தேடும் முயற்சியில் நவீன் மற்றும் கார்த்திக் இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் கார்த்திக் நவீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா இல்லை நாளையும், நாளை மறுநாளும் இந்த காட்சி தொடர்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.