
கார்த்திகை தீபம் 2 சீரியலானது விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் ரேவதி திருமணத்தின் போது வரதட்சணை சீதனத்தை காண்பிக்கவில்லை. இந்த சூழலில் இப்போது துர்கா மற்றும் செல்வம் திருமணத்தின் போது வரதட்சணை பொருட்களை மாப்பிள்ளை வீட்டாரிம் காண்பித்துள்ளார்.
ஏற்கனவே மாப்பிள்ளையின் அம்மா மற்றும் அப்பா இருவரும் திருடர்கள் என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்த சூழலில் இந்த வாரம் அவர்களைப் பற்றிய உண்மை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று மாப்பிள்ளையும் சீட்டிங் என்பது ரோகிணிக்கு தெரிந்த நிலையில் இந்த வாரம் அவரைப் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி உண்மை தெரிய வரும் சூழலில் நவீன் மற்றும் துர்காவின் திருமணம் நல்லபடியாக நடந்து முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாக பரமேஸ்வரி குடும்பம் தான் தனது அம்மாவை கொன்றார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கான்ஸ்டபிள் மூலமாக சாமுண்டீஸ்வரிக்கு தனது அம்மாவை கொன்றது யார் என்ற உண்மை தெரிந்து இரு வீட்டாரது குடும்பமும் ஒன்று சேருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி ஒன்று சேர்ந்தால் இந்த சீரியல் முடிவுக்கு வருமா என்பது குறித்தும் இந்த வாரம் தெரிய வரும். அதுவரையில் பொறுமையாக இருந்து கார்த்திகை தீபம் 2 சீரியலை பார்த்து ரசிக்கலாம்.
குறிப்பாக கார்த்திக் மற்றும் ரேவதிக்கு குழந்தை பிறக்கும் காட்சிகளும் சீரியலில் ஒரு சில காட்சிகளில் இடம் பெற்ற நிலையில் இப்போதைக்கு இந்த சீரியலானது முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.