கடந்த வாரம் கமல்ஹாசனின் விசாரிப்பு கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில்... இன்றைய தினம் செம்ம ஃபாமில் வந்து, போட்டியாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வாரங்களை காட்டிலும், இந்த வாரம் தான் போட்டியாளர்கள் கோபத்தையும், சண்டை போடுவதையும் நிறுத்தி விட்டு ஒற்றுமையாக விளையாடியது போல் தெரிந்தது. டைமிங் டாஸ்க் மற்றும் டான்ஸ் டாஸ்கில் கூட, மிகவும் நேர்மையாக விளையாடியதை பார்க்க முடிந்தது. எனவே இந்த வாரம் கமல் ரொம்ப கூலாக போட்டியாளர்களை டீல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
காரணம், பல சமயங்களில் சர்ச்சையான பிரச்னையை கூட சாதாரணமாக தவிர்த்து விடும் இவர்... இந்த வாரம் சின்ன சின்ன விஷயத்தை கூட நோட் செய்து, போட்டியாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார். முதல் புரோமோவிலேயே போட்டியாளர்கள் சாயம் வெளுத்து விட்டதோ... என பேசிய ஆண்டவர், இரண்டாவது புரோமோவில், "பூர்ணிமா மற்றும் மாயாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ’கமல் சார் என்ன கேட்டாலும் அந்த நேரத்தில் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார்.
அதை சுட்டி காட்டிய கமல்ஹாசன் ’என்ன வேணும்னாலும் நீங்க சொல்வீங்க நான் அதை கேட்டுப்பேனா.. சொல்லுங்க.. ஏ பூ கொண்டு வாங்கப்பா.. யாரு காதுல வைக்கிறதுன்னு நீங்க சொல்லி முடித்ததும் தான் முடிவு பண்ணனும். எங்க காதுல வைக்க முடியாது, ஏன்னா இங்க 3 கோடி பேர் இருக்கோம். அதாவது உங்களுடைய திட்டம் வந்து நான் கேட்கும் போது பொய் சொல்லி சமாளிக்கலாம் என்பதுதான்’ என்று கூறினார். பூர்ணிமாவும் கொஞ்சம் கோவமாக வார்த்தையை விட... அதற்கும் பதிலடி கொடுத்து அவர் வாயை மூட வைத்தார்.
இதை தொடர்ந்து வெளியான மூன்றாவது புரோமோவில், ரவீனா மணிக்காக தான் நான் விளையாடுகிறேன் என கூறியது... குறித்தும் ஃபேவரட்டிசம் விளையாட்டு விளையாடி வருவதையும் சுட்டி காட்டிய கமல், அவரின் விளையாட்டை நீங்கள் ஸ்பாயில் பண்றீங்க என கூறினார். கடந்த வாரம் சொருகிடுவேன் என கூறியதை ஒரு பிரச்சனையாக கண்டு கொள்ளாமல்... தாவூலத்து என்கிற தாமாத்தோன்டு வார்த்தைக்கு வாய் கிழிய பேசிய கமல்... வாங்கிய விமர்சனங்களுக்கு இந்த வாரம் ஒர்த்தாக நடந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.