ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவி தீபாவிடம் எமோஷனல் டிராமா போட்டு நம்ம வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, எல்லாரும் ஹாலில் உட்கார்ந்திருக்க ஐஸ்வர்யா பல்லவியை வைத்து ஏதாவது செய்யலாம் என்று பிளான் போட்டு காபியை அவளிடம் கொடுத்து எல்லாருக்கும் எடுத்திட்டு போய் கொடு, சும்மா இருந்ததால் செய்ததாக சொல்லு என அனுப்பி வைக்க அவளும் எல்லாருக்கும் காபி கொடுக்கிறாள்.
கார்த்திக் நீங்க எதுக்கு இதையெல்லாம் செய்யறீங்க என்று கேள்வி எழுப்ப இல்ல வீட்டில சும்மா தானே இருக்கோம் அதனால் செய்ததாக சொல்கிறாள். அதோடு கார்த்திக் உங்களுக்கு எதுக்கு கஷ்டம் என்று சொல்ல எனக்காக நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்யறீங்க, உங்களுக்காக நான் இதை கூட செய்ய மாட்டேனா என்று பேசி அங்கிருந்து வருகிறாள்.
இதை பார்த்த தீபாவும் மீனாட்சியும் பல்லவியை வழி மறித்து நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்துட்டு இருக்க? பாட வந்த நீ அந்த வேலையை மட்டும் பார்த்திட்டு கிளம்பு என சொல்கின்றனர். இல்ல ஐஸ்வர்யா அக்கா காபி போட நின்னுட்டு இருந்தாங்க. அவளுக்கு காபி போட தெரியாதுன்னு சொன்னாங்க. நான் தீபா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அவங்க தீபா கிச்சனுக்குள் வர கூடாதுனு கண்டிஷன் இருக்கு சொன்னதாக சொல்ல தீபா அதெல்லாம் இப்போ இல்ல, நீ உன் வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்பு என வார்னிங் கொடுக்கிறாள்.
அதன் தொடர்ச்சியாக கார்த்தியின் ரூமுக்குள் வரும் தீபா உங்க கிட்ட பேசணும், பல்லவி எப்போ போவா? அவளுக்கு எப்போ ரெக்கார்டிங் என்று மிரட்டலாக கேட்க கார்த்திக் என்னங்க மிரட்டுறீங்க என்று கேட்கிறான். இல்ல அவ அம்மாவை பார்க்கணும் போல இருக்குனு சொல்லிட்டு இருக்கா என்று சொல்ல 1 வாரம் ஆகுமே என்று கார்த்திக் பொய் சொல்லி விளையாட தொடங்க தீபா நாளைக்கு தானே ரெக்கார்டிங் அப்புறம் எதுக்கு ஒரு வாரம் என கோபப்பட இப்படி ஏதாவது நடந்தா தான் பொண்டாட்டி மாதிரி நடந்துக்கிறீங்க. இப்படியே இருங்க இது தான் நல்லா இருக்கு என்று சொல்லி வெளியே செல்ல பல்லவி எப்போ போவான்னு சொல்லிட்டு போங்க என்று திரும்பவும் அதட்ட நாளைக்கு கிளம்பிடுவாங்க என்று சொல்லி செல்கிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மறுபக்கம் ஐஸ்வர்யா நாளைக்கு எப்படி நடந்துக்கணும், எப்படி பாடணும் என பல்லவிக்கு ஏதோ சொல்கிறாள். இளையராஜா கார்த்திக்கு போன் செய்து நாளைக்கு ஏற்பாடு பண்ணிடலாமா? பல்லவி வந்துடுவாங்களா? என்று கேள்வி கேட்க கார்த்திக் ஏற்பாடுகள் செய்ய சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.