பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரோமோவிலும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்க் பற்றி தான் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இதுவரை போட்டியாளர்கள் யாரும் எதிர்பாராத பல டாஸ்குகளை கொடுத்து... ஷாக் கொடுத்து வருகிறார் பிக்பாஸ். அந்த வகையில்... தற்போது பிக் பாஸ் வீட்டில் பூகம்பம் டாஸ்க் நடந்து வருகிறது.
இந்த டாஸ்கில் தோற்றால், இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ள போட்டியாளர்களின் மூன்று பேர் வெளியேற்றப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே நாமினேட் செய்யப்பட்டு வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற டாஸ்கில், போட்டியாளர்கள் தோற்றதால் இந்த வாரம் ஒரு போட்டியாளர் உள்ளே வருவது உறுதியாகி உள்ளது.
மேலும் இதை தொடர்ந்து, போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்த டாஸ்க் இன்றைய தினமும் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து இரண்டு புதிய டாஸ்குகள் இன்றைய தினம் நடத்தப்படுகிறது. இது குறித்து முதல் புரோமோவில் தெரிவிக்கப்பட்டியிருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இரண்டாவது புரோமோவில், போட்டியாளர்கள் தோற்றதால்... அவர்கள் பயன்படுத்தும் உப்பு அல்லது சர்க்கரையை தியாகம் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இதை தொடர்ந்து, போட்டியாளர்களிடம் இருந்து சர்க்கரை பறிக்கப்படும் நிலையில் யாரோ ஒருவர் சர்க்கரையை திருடி வைக்க அதனை பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் கண்டு பிடித்து எடுக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அட கடவுளே... கடைசியில பிக்பாஸ் டாஸ்கால் போட்டியாளர்கள் திருடர்களாக மாறி விட்டார்களே என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.