தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்று ரத்னா முத்துபாண்டியிடம் ஷண்முகத்துடன் மோதி ஜெயித்தால் என்னை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஷண்முகம் சிவனாகவும் முத்துப்பாண்டி அசுரனாகவும் மோதி கொள்ள இருவருக்கும் இடையே கடுமையாக மோதல் நடக்கிறது, இறுதியாக முத்துபாண்டியை ருத்ரதாண்டவம் ஆடி அதர்மத்தை அழிக்கிறான் சிவனாக கெட்டப் போட்ட ஷண்முகம்.
இதனை தொடர்ந்து இனிமே ரத்னா பக்கம் திரும்பி கூட பார்க்க கூடாது என முத்துபாண்டிக்கு வார்னிங் கொடுக்க அவனுக்கும் வன்மம் இன்னும் கொழுந்திட்டு எரிய தொடங்குகிறது, சௌந்தரபாண்டி முத்துபாண்டியின் தோல்வியை அவமானமாக பார்க்கிறார்.
அடுத்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் இசக்கி, வீரா ஆகியோர் சாப்பிட உட்கார்ந்திருக்க தங்கைகள் இந்த சண்டை குறித்து பேசி அந்த முத்துபாண்டிக்கு இதெல்லாம் தேவை தான் என பேசி கொள்கின்றனர், திடீரென ரத்னா இல்லாததை அறியும் ஷண்முகம் உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைந்து அவளை தேட தொடங்குகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடைசியாக ரத்னா தெருமுனையில் உட்கார்ந்து வெங்கடேஷ் மற்றும் அண்ணனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க ஷண்முகம் என்னாச்சு என்று கேட்க அந்த முத்துப்பாண்டி உங்களை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டான் என்று சொல்ல அவன் எத்தனை முறை வந்தாலும் என் தங்கச்சிக்காக அவனிடம் சண்டை போடுவேன் என்று சொல்கிறான். மேலும் ரத்னாவுக்கும் வெங்கடேஷ்க்கும் கல்யாணம் செய்து வைப்பது தான் இதற்கு ஒரே தீர்வு எனவும் முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடிக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.