
Anna Serial Today 766 Episode in Tamil : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கடந்த வார எபிசோடில் வெங்கடேஷிற்கு பரணி டிரீட்மெண்ட் கொடுக்கும் போது வைஜெயந்தியைப் பற்றி எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டார். இதனால் கோபம் கொண்ட சண்முகம் இன்றைய எபிசோடில் என்ன செய்ய போகிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோல் எப்படியவது பாதுகாப்பாக வெங்கடேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று முத்துப்பாண்டி மற்றும் சண்முகம் ஆகியோர் பேசிக் கொள்கின்றனர். மேலும், போலீஸ் கண்ணில் மட்டும் வெங்கடேஷ் தென்பட்டு விடக் கூடாது என்பதில் மட்டும் இருவரும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். முதலில் வக்கீல் வந்து பாதுகாப்பாக வெங்கடேஷை கோர்டில் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது தான் எல்லா உண்மைகளும் வெளியில் வரும் என்று கூற முத்துப்பாண்டி இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
பிறகு வைகுண்டத்திற்கு பதனியை பார்த்தது பாக்கியம் ஞாபகம் வர உடனே பதனியுடன் சௌந்தர பாண்டி வீட்டிற்கு வந்து கொடுக்கிறார். பரணி உன்ன வாங்கி கொடுத்ததாக சொல்லி இசக்கிக்கு பதனி கொடுக்க சௌந்தரபாண்டி இதையெல்லாம் பார்த்து கடுப்பாகிறார். மறுபக்கம் இன்ஸ்பெக்டர் குரு வைஜெயந்தியை சந்தித்து வெங்கடேசை எங்கு தேடியும் காணவில்லை என்று சொல்ல வைஜெயந்தி அவனை எப்படியாவது கண்டுபிடித்துக் கொல்லணும்.. அவன் உயிரோட இருந்தா நம்ம எல்லாருக்கும் ஆபத்து என்று சொல்ல குரு வெங்கடேஷை நான் தேடி கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்புகிறான்.
அதன் பிறகு முத்துப்பாண்டி வைஜயந்தி கோர்ட்டுக்கு வெங்கடேஷை அழைத்து வர வேண்டும் என்று சொல்கிறார். ஆம்புலன்ஸ், கார் போன்ற வாகனங்களில் அழைத்து வர முடியாது என்று சொல்ல சண்முகம் அதுக்கு என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று சொல்கிறார். அவர் சொன்னபடி வெங்கடேஷ் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டாரா இல்லையா என்பது தான் அண்ணா சிரியலில் இன்றைய எபிசோடு.