ஒரே நாளில் ரூ.97 லட்சம் டிப்ஸ் கிடைச்சுருக்கு! ஜொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தகவல்

By SG Balan  |  First Published Jan 2, 2024, 6:22 PM IST

2015 முதல் 2020ஆம் ஆண்டு வரை புத்தாண்டுக்கு முந்தைய இரவில் வந்த ஆர்டர்களை விட மிகவும் அதிகமான ஆர்டர்கள் இந்தப் புத்தாண்டில் கிடைத்துள்ளன என்றும் தீபிந்தர் கோயல் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.


புத்தாண்டு தினத்தன்று பல உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மிக அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமேட்டோ (Zomato) போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் முந்தைய ஆண்டுகளின் சாதனைகளை முறியடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஜொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல், புத்தாண்டு தினத்தன்று தங்கள் டெலிவரி ஏஜெண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் மொத்தம் ரூ.97 லட்சத்துக்கும் மேல் டிப்ஸ் கொடுத்திருப்பதாத் தெரிவித்துள்ளார். "லவ் யூ, இந்தியா! இன்றிரவு உங்களுக்கு சேவை செய்யும் டெலிவரி பார்ட்னர்களுக்கு இதுவரை ரூ.97 லட்சத்துக்கு மேல் டிப்ஸ் அளித்திருக்கிறீர்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

Tech Tips: ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

இந்தப் ட்வீட்டுக்குப் பதிலளித்த ஒரு பயனர், டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் பற்றி மேலும் தகவல்களை அறிய விரும்புவதாகக் கூறியுள்ளார். ஒரு ஆர்டருக்கு சராசரியாக எவ்வளவு டிப்ஸ் கிடைக்கிறது, ஆர்டர் மதிப்பில் எத்தனை சதவீதம் போன்ற விவரங்களை அவர் கோரியிருந்தார்.

Love you, India! You’ve tipped over ₹97 lakhs till now to the delivery partners serving you tonight ❤️❤️❤️

— Deepinder Goyal (@deepigoyal)

மற்றொரு பயனர், ''அவர்கள் (டெலிவரி ஏஜெண்ட்கள்) அதற்கு தகுதியானவர்கள்'' என்று கருத்து தெரிவித்தார். ''இது மிகவும் அருமை!! சூப்பர் ஹேப்பி'' என்று இன்னொரு ட்விட்டர் பயனர் தெரிவித்துள்ளார்.

''பலர் பணமாகச் டிப்ஸ் கொடுக்கிறார்கள். பெரியதோ, சிறியதோ எதுவாக இருந்தாலும், மக்கள் ஒரு கோடியை நெருங்குகிறார்கள். அது ஒழுக்கமானது. அதனால்தான் உலகம் கடினமாகவும், நியாயமற்றதாகவும், இழிவாகவும் தோன்றினாலும், சிலரின் நன்மையை நீங்கள் நம்புவது போல் உணர்கிறீர்கள். இல்லையெனில் உலகம் சீராக இயங்காது.''

2015 முதல் 2020ஆம் ஆண்டு வரை புத்தாண்டுக்கு முந்தைய இரவில் வந்த ஆர்டர்களை விட மிகவும் அதிகமான ஆர்டர்கள் இந்தப் புத்தாண்டில் கிடைத்துள்ளன என்றும் தீபிந்தர் கோயல் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஜொமேட்டோவுக்குச் சொந்தமான விரைவான வர்த்தக விநியோக தளமான பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தின் அல்பிந்தர் திந்த்சா ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒரே நாளில் அதிகபட்ச ஆர்டர்களைப் பதிவு செய்திருப்பதாகக் கூறினார்.

கூகுள் மேப் லொகேஷனை நண்பர்களுடன் ஷேர் செய்வது எப்படி?

click me!