Microsoft CEO Satya Nadella : 26 வயதான மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. மகன் உயிரிழப்பு

By Kevin Kaarki  |  First Published Mar 1, 2022, 12:15 PM IST

Microsoft CEO Satya Nadella : மைக்ரோசாஃப்ட் நிறுவன சி.இ.ஒ. சத்ய நாதெல்லா மகன் செயின் நாதெல்லா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவின் மகன் செயின் நாதெல்லா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 26.  செயின் நாதெல்லா பிறக்கும்  போதே முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

"செயின் உயிரிழந்து விட்டார். ஊழியர்கள் சத்ய நாதெல்லா மற்றும் அவரது குடும்பத்தாரை தங்கள் நினைவில் வைத்து பிரார்த்தனை செய்து, அவர்களுக்கு தனிமையில் இருக்க உதவுங்கள்," என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிர்வாக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

2014 ஆம் ஆண்டு தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றதில் இருந்து, சத்ய நாதெல்லா குறைபாடு கொண்ட பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் செயின் நாதெல்லாவை வளர்ப்பதில் தான் பெற்ற அனுபவங்களை இதற்கு உதாரணங்களாக தெரிவித்து வந்தார். 

செயின் நாதெல்லா நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் சீட்டில் குழந்தைகள் மையத்தின் நரம்பியல் பிரிவில் ஒருங்கிணைந்த மூளை குறித்த ஆய்வு நடத்த செயின் நாதெல்லா இருக்கை அமைக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான நிதியை நாதெல்லா வழங்கினார். 

இசையில் எலெக்ட்ரிக் டேஸ்ட், பிராகசமான சிரிப்பு, குடும்பத்தார் மற்றும் அவனை விரும்பியவர்களிடம் அவன் செலுத்திய அன்பு உள்ளிட்டவைகளில் செயின் நாதெல்லா எப்போதும் நினைவு கொள்ளப்படுவார் என குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஸ்பெரிங் தனது நிர்வாக குழுவினரிடம் தெரிவித்தார். இதே  தகவல் மைக்ரோசாஃப்ட் அதிகாரிகளுக்கும் பகிரப்பட்டது.

click me!