Realme Pad Mini: ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ரியல்மி Pad மினி மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி Pad மினி மாடல் இந்திய சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் வாரங்களில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது ரியல்மி Pad மாடலின் குறைந்த விலை வெர்ஷனாக உருவாகி இருக்கிறது. புதிய ரியல்மி Pad மினி மாடல் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் லீக் ஆன ரெண்டர்களில் ரியல்மி Pad மினி மாடல் சில்வர் நிறத்தில் அறிமுகமாகும் என தெரியவந்தது. இதுதவிர இந்த மாடலில் 8.7 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் T616 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 64GB மெமரி வழங்கப்படும் என்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம். இந்த டேப்லெட் மாடல் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். சார்ந்த ரியல்மி யு.ஐ. கொண்டிருக்கும்.
undefined
புதிய ரியல்மி Pad மினி மாடலில் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 6400mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த டேப்லெட் அளவில் மிக மெல்லியதாக இருக்கும் என்றும் இதன் திடமன் 7.6mm தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Pad மாடலின் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி Pad மினி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் ரியல்மி Pad மினி மாடல் மார்ச் மாதத்தின் இரண்டாவுது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.