ஃபோல்டபில் ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்? லீக் ஆன சூப்பர் தகவல்

By Kevin Kaarki  |  First Published Feb 28, 2022, 3:35 PM IST

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


கடந்த ஆண்டு மட்டும் சுமார் 80 லட்சம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க விற்பனையாகின. இந்த ஆண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங், ஹூவாய், மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் வரிசையில், கூகுள் நிறுவனமும் மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனமும் மடிக்ககூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. பின் இந்த திட்டத்தை ஆப்பிள் கைவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி ஆப்பிளின் மடிக்கக்கூடிய சாதனம் மடிக்கக்கூடிய ஐபேட் / மேக்புக் ஹைப்ரிட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 20 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க லெனோவோ தின்க்பேட் X1 ஃபோல்டு போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த சாதனத்தை கிளாம்ஷெல் லேப்டாப் போன்று பயன்படுத்தலாம். 

இது உண்மையாகும் பட்சத்தில் வழக்கமான கீபோர்டு மற்றும் டிராக்பேட்-க்கு மாற்றாக விர்ச்சுவல் கீபோர்டை பயன்படுத்த வேண்டி இருக்கும். "கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் / மேக்புக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறறது. இந்த சாதனத்தை 2026 வாக்கில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது. இதே ஆண்டில் ஆப்பிள் ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ் மற்றும் ஆப்பிள் கார் உள்ளிட்டவை அறிமுகமாகும்," என வினியோக பிரிவு வல்லுனரான ராஸ் யங் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியான மற்றொரு தகவலில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம் குறித்து இன்னமும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. பொதுவாக பார்க்கும் பட்சத்தில் மடிக்கக்கூடிய போன்கள் அளவில் பெரியதாகவும், எளிதில் சேதமடையும் வகையில் தான் இருக்கிறது. மேலும் இவற்றின் விலையும் அதிகம். இதுமட்டுமின்றி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் கேமராவும் அதிக சிறப்பானதாக இருப்பதில்லை.

இதன் காரணமாக தற்போதைய சூழலில் ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் அறிமுகமாகாது என்றே கூறப்படுகிறது. ஒருவேளை எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் போது, இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கலாம். மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் பற்றிய விவரங்கள் 2019 வாக்கில் முதன்முதலில் வெளியானது. அப்போது மடிக்கக்கூடிய ஸ்லேட் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதில் ஏ சீரிஸ் சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டது. 

click me!