போக்கோ நிறுவனத்தின் புதிய போக்கோ M4 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. போக்கோ M4 ப்ரோ 4ஜி பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஸ்மார்ட்போன் போக்கோ ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ M4 ப்ரோ 5ஜி மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் 90Hz AMOLED டிஸ்ப்ளே கொண்ட முதல் M சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என போக்கோ தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்று இரவு 7 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்வு போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
undefined
அம்சங்களை பொருத்தவரை போக்கோ M4 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, L1 வைடுவைன் சான்று, IP53 பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 4ஜி பிராசஸர், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3.5mm ஹெட்போன் ஜாக், 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. போக்கோ M4 ப்ரோ மாடலில் 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படலாம்.
இந்தியாவில் போக்கோ M4 ப்ரோ 5ஜி மாடலின் 4GB ரேம் விலை ரூ. 14,999 என்றும், 6GB ரேம் விலை ரூ. 16,999 என்றும் 8GB ரேம் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் போக்கோ M4 ப்ரோ 4ஜி மாடல் விலை இதை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.