பார்சிலோனாவில் நடைபெறும் MWC 2022 நிகழ்வில் சாம்சங் புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் MWC 2022 நிகழ்வில் கேலக்ஸி புக் 2 ப்ரோ, கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மற்றும் கேலக்ஸி புக் 2 360, தவிர கேலக்ஸி புக் 2 பிஸ்னஸ் மற்றும் கேலக்ஸி புக் 2 மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய குறைந்த எடை கொண்ட பிஸ்னஸ் லேப்டாப் சீரிஸ் மாடல்களை சாம்சங் நிறுவனம் இண்டெல் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் உடனான கூட்டணியின் அங்கமாக அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் விண்டோஸ் 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் ப்ரோ 360, கேலக்ஸி புக், கேலக்ஸி புக் ஒடிசி மற்றும் கேலக்ஸி புக் ப்ரோ 360 5 ஜி உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் 2 360 மற்றும் கேலக்ஸி புக் 2 ப்ரோ மாடல்கள் சில்வர் மற்றும் கிராஃபைட் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் பர்கண்டி, கிராஃபைட் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி புக் 2 பிஸ்னஸ் மாடல் கிராஃபைட் நிறத்தில் கிடைக்கிறது.
கேலக்ஸி புக் 2 ப்ரோ அம்சங்கள்
புதிய சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ மாடலில் விண்டோஸ் 11 ஓ.எஸ்., 13.3. இன்ச் மற்றும் 15.6 இன்ச் FHD+1920x1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, இண்டெல் கோர் ஐ7 மற்றும் கோர் ஐ5 பிராசஸர்கள், அதிகபட்சமாக 32GB LPDDR5 ரேம் வழங்கப்பட்டுள்ளன. இதன் 15.6 இன்ச் மாடல் இருவித இண்டெர்னல் அல்லது எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இவற்றில் அதிகபட்சமாக 1TB வரையிலான NVMe SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி புக் 2 ப்ரோ மாடலில் டூயல் ஸ்டீரியோ 40 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், கனெக்டிவிட்டிக்கு வைபை 6E, ப்ளூடூத் 5.1, தண்போர்ல்ட் 4, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், யு.எஸ்.பி. 3.2 டைப் ஏ போர்ட், HDMI போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 அம்சங்கள்
இந்த மாடலில் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் FHD+ 1920x1080 பிக்சல் சூப்பர் AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இண்டெல் கோர் ஐ7 மற்றும் கோர் ஐ5 பிராசஸர்கள், அதிகபட்சம் 32GB LPDDR5 ரேம், 1TB NVMe SSD ஸ்டோரேஜ் உள்ளது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ 40 வாட் ஸ்பீக்கர்கள் டால்பி அட்மோஸ், வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் தண்போர்ல்ட் 4, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 2 யு.எஸ்.பி. 3.2 டைப் ஏ போர்ட், HDMI போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி புக் 2 360 அம்சங்கள்
புதிய கேலலக்ஸி புக் 2 360 மாடலில் 13 இன்ச் FHD+ 1920x1080 பிக்சல் OLED டிஸ்ப்ளே, டச் ஸ்கிரீன் வசதி, இண்டெல் கோர் ஐ7 மற்றும் கோர் ஐ5 பிராசஸர், அதிகபட்சம் 16GB LPDDR5 ரேம், மற்றும் அதிகபட்சம் 1TB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 2 யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 2 யு.எஸ்.பி. 3.2 டைப் ஏ போர்ட், HDMI போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி புக் 2 பிஸ்னஸ் அம்சங்கள்
14 இன்ச் FHD+1920x1080 பிக்சல் ஆண்டி கிளேர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த மாடல் இண்டெல் விப்ரோ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் விண்டோஸ் 11 ப்ரோ ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் அதிநவீன 12th Gen இண்டெல் கோர் ஐ7 பிராசஸர்கள் மற்றும் 12th Gen இண்டெல் கோர் ஐ5 பிராசஸர் அல்லது 12th Gen இண்டெல் கோர் ஐ7, கோர் ஐ5 மற்றும் ஐ3 பிராசஸர் வழங்கப்படுகின்றன.
இதில் அதிகபட்சம் 64GB ரேம், இண்டெல் UHD கிராஃபிக்ஸ், இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் மற்றும் NVIDIA GeForce MX570 A கிராஃபிக்ஸ் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை தவிர இந்த லேப்டாப் அதிகபட்சம் 1TB SSD ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி புக் 2 அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி புக் 2 மாடல் விண்டோஸ் 11, 15.6 இன்ச் FHD+1920x1080 பிக்சல் OLED டிஸ்ப்ளே, SSD மற்றும் HDD ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த லேப்டாப்பில் இண்டெல் கோர் ஐ3, கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 பிராசஸர்கள், அதிகபட்சம் 16GB ரேம் உள்ளது. இண்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 மாடல்களில் இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. ஐ3 மாடலில் இண்டெல் UHD கிராஃபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. மேலும் இதில் அதிகபட்சமாக 1TB ஸ்டோரேஜ், SSD வேரியண்டில் எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.