ஒரே கல்லில் 2 மாங்கா - சோலார் சார்ஜிங் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு புது ஸ்கெட்ச் போடும் கார்மின்

By Kevin Kaarki  |  First Published Feb 26, 2022, 4:26 PM IST

கார்மின் நிறுவனம் விரைவில் சோலார் சார்ஜிங் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யும்  பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ஸ்விஸ் நாட்டை சேர்ந்த ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அடுத்துக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புது காப்புரிமைகளை பெற்று இருக்கிறது. சோலார் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட அவுட்-டோர் விசிபிலிட்டி கொண்ட ஸ்மார்ட் அணியக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் பல்வேறு நிறுவனங்கள் ஆரவம் காட்ட தொடங்கி இருக்கின்றன.

இதுபோன்ற வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் நீண்ட பேட்டரி  பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் OLED டிஸ்ப்ளே அனுபவத்தை மேம்படுத்துவது என இருவித பலன்கள் அளிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்வாட்ச் OLED டிஸ்ப்ளேவுக்கு கார்மின் காப்புரிமை பெற்று இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

காப்புரிமை விண்ணப்பத்தின் படி OLED டிஸ்ப்ளேவில் கார்மின் பயன்படுத்தும் தொழில்நுட்பம், கர்மின் வாட்ச்களை சார்ஜ் செய்ய டிஸ்ப்ளே மாட்யூல்களையே பயன்படுத்துகிறது. OLED டிஸ்ப்ளேவின் சப்-பிக்சல்களில் (subpixels) போட்டோ-வோல்டிக் செல்கள் வைக்கப்படுகின்றன. இவை ஸ்மார்ட்வாட்ச்-க்கு தேவையான சக்தியை பெற்றுக் கொள்ளும் திறனை வழங்குகிறது.

ஏற்கனவே மெமரி இன் பிக்சல் (MIP) ரக டிஸ்ப்ளேக்கள் மூலம் சோலார் சார்ஜிங் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கார்மின் விற்பனை செய்து வருகிறது. புதிய OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம் முந்தைய MIP எனப்படும் மெமரி இன் பிக்சல் முறையை விட நல்ல பலன்களை தரும். இத்துடன் அதிக ரிப்ரெஷ் ரேட், நேரடி சூரிய வெளிச்சத்திலும் மேம்பட்ட விசிபிலிட்டியை வழங்கும். 

சோலார் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் தற்போதைய கார்மின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் மெல்ல மேம்படுத்தப்பட்டு, புதிய மாடல்களும் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த காப்புரிமையின் நிலை மற்றும் இந்த தொழில்நுட்பத்தின் வளளர்ச்சி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

click me!