Poco M4 Pro: சூப்பர் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

By Kevin KaarkiFirst Published Mar 1, 2022, 9:43 AM IST
Highlights

Poco M4 Pro: போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் போக்கோ M4 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ M4 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.43 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், அதிகபட்சம் 8GB ரேம், 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI13 ஓ.எஸ்., பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, 33 வாட் ப்ரோ டூயல் ஸ்ப்லிட் ஃபாஸ்ட்  சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.

போக்கோ M4 ப்ரோ அம்சங்கள்:

- 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 6GB LPDDR4X ரேம்,  64GB / 128GB UFS 2.2 மெமரி
- 8GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13
- டூயல் சிம் ஸ்லாட் 
- 64MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.4
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

போக்கோ M4 ப்ரோ ஸ்மார்ட்போன் கூல் புளூ, பவர் பிளாக் மற்றும்  போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. அறிமுக சலுகையாக புதிய போக்கோ M4 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்

போக்கோ M4 ப்ரோ 6GB+64GB மெமரி ரூ. 14,999
போக்கோ M4 ப்ரோ 6GB+128GB மெமரி ரூ. 16,499
போக்கோ M4 ப்ரோ 8GB+128GB மெமரி ரூ. 17,999

click me!