Youtube வீடியோ தளத்தில் 4K வீடியோவில் பிரீமியம் சந்தா கொண்டு வருவதற்கு முயற்சி நடந்து வருகிறது.
சமீபகாலமாக யூடியூப் உள்ள வாடிக்கையாளர்களை சந்தா கணக்கிற்கு மாற்றுவதற்கு யூடியூப் நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. வீடியோக்களில் அதிக விளம்பரங்களை வைப்பது, விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டுமென்றால் பணம் கொடுத்து சந்தாவில் இணையும்படி சொல்வது உள்ளிட்ட விஷயங்கள் அரங்கேறி வருகின்றன.
அண்மையில் 5 விளம்பரங்களை தொடர்ச்சியாக, தவிர்க்கவே முடியாதபடி வீடியோவில் கொண்டு வருவதற்கு யூடியூப் சோதனை செய்தது. ஆனால், இதற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 5 விளம்பரங்கள் என்ற கருத்தை யூடியூப் கைவிட்டது.
டுவிட்டரில் Tweet Edit அம்சம் அமலுக்கு வந்தது! பயன்படுத்துவது எப்படி?
இந்த நிலையில், தற்போது வீடியோ தரத்தில் கை வைத்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ தரம் குறித்து ஒரு ஸகிரீன்ஷாட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, 4K வீடியோ தரத்தில் தேர்வு செய்யும்பட்சத்தில், பிரீமியம் சந்தா செலுத்தும்படி கேட்கிறது.
இவ்வாறு அதிக துல்லியமான வீடியோவை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது ஏற்கெனவே ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல வீடியோ தளங்களில் உள்ளது. அதே யுக்தி தற்போது யூடியூப்பிலும் கொண்டு வருவதற்கான சோதனை நடைபெறுகிறது.
Airtel, Jio, VI 5G கிடைக்கும் இடங்கள், 5ஜி ரீசார்ஜ் பிளான்கள் உள்ளிட்ட முழுவிவரங்கள் இதோ!
அதிக துல்லியத்தன்மையுடன் வீடியோவை பார்க்க வேண்டுமென்றால் பணம் செலுத்தி பிரீமியம் சந்தாவில் இணைய வைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கெனவே 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் பெரும்பாலானோர் 4K தரத்திலான வீடியோவுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பர். இதனால், 4K கட்டண முறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.