மிகக்குறைந்த விலையில் Xiaomi Redmi Pad அறிமுகம்!

Published : Oct 05, 2022, 06:20 PM IST
மிகக்குறைந்த விலையில் Xiaomi Redmi Pad அறிமுகம்!

சுருக்கம்

ஷாவ்மி நிறுவனம் மிகக்குறைந்த விலையில் Xiaomi Redmi Pad என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. 

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் இருக்கும் ஷாவ்மி நிறுவனம் தற்போது பட்ஜெட் விலையில் Xiaomi Redmi Pad டேப்லெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ரெட்மி பேட் என்று பெயரிடடப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களுடன், குறிப்பாக கேம்ஸ் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லெட் கிராஃபைட் கிரே, மூன்லைட் சில்வர் மற்றும் மின்ட் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இன்று அக்டோபர் 5 ஆம் தேதி முதல் Mi ஆன்லைன் ஸ்டோர், Mi ஹோம்ஸ், பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கும். 

இது 3GB+64GB, 4GB+128GB மற்றும் 6GB+128GB முறையே ரூ.12,999, ரூ.14,999 மற்றும் ரூ.16,999 என்ற அறிமுக விலையில் கிடைக்கும். 6ஜிபி + 128 ஜிபி (மின்ட் கிரீன்) வேரியண்ட் ஆனது அக்டோபர் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு Mi ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்தது.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Redmi Pad.. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

முதன்முறையாக ரெட்மி பேட் டேப்லெட்டில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், திரையானது 10.61-இன்ச், 2K HD, 90Hz ரெவ்ரெஷ் ரேட் ஆகியவை உள்ளன.திரை TUV ரைன்லேண்ட் மற்றும் குறைந்த அளவிலான நீல ஒளி உமிழ்வு SGS சான்றளிக்கப்பட்டது. எனவே, கண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் திரை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடியோவைப் பொறுத்தவரை, டேப்லெட்டில் டால்பி அட்மோஸ் உடன் நான்கு-ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது. கூடுதலாக, உயர்தர ஆடியோவுக்கான அம்சமும் உள்ளது.  8,000 mAh பேட்டரி சக்தி வழங்கப்பட்டுள்ளதால், 21 மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்து உழைக்கும். 

Samsung S23 Ultra Price: விரைவில் அறிமுகமாகும் ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்

Redmi Pad ஆனது Android 12 இயங்குதள அடிப்படையில் MIUI 13 கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பிளிட் ஸ்கிரீன், ஃப்ளோட்டிங் விண்டோக்கள் மற்றும் மல்டி-விண்டோ அம்சங்களுக்கான பல்வேறு வசதிகள் உள்ளன.  டேப்லெட் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்டுகளையும், ஆண்ட்ராய்டின் இரண்டு வெர்ஷன் வரையில் அப்டேட் பெறும், ஃபோகஸ்ஃப்ரேம் (Focus Frame) தொழில்நுட்பத்துடன் கூடிய 8-மெகாபிக்சல் 108-டிகிரி வைட்-ஆங்கிள் முன்பக்கக் கேமரா உள்ளது. ஃப்ரேமில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடமளிக்கும் வகையில் முன்பக்கக் கேமரா பரந்த பார்வைக்கு தானாக மாறுகிறது. WhatsApp, Messenger அரட்டைக்கு என சகல வசதிகளும் உட்புகுத்தப்பட்டுள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?