அடேங்கப்பா.. வெறும் 10 ரூபாய்க்கு Youtube Premium!

By Dinesh TGFirst Published Oct 10, 2022, 7:27 PM IST
Highlights

Youtube Premium தற்போது 10 ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை பெறுவது எப்படி, எவ்வளவு மாதங்கள் இருக்கும் என்பது குறித்து இங்குக் காணலாம்.

நம்பர் ஒன் வீடியோ தளமாக இருக்கும் யூடியூப்பில் தற்போது அதிரடியான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யூடியூப் பிரீமியம் வெறும் 10 ரூபாய்க்கு வாங்கலாம் என்றும், இதன் மூலம் மூன்று மாதங்கள் வரையில் பிரீமியம் சந்தாவை அனுபவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 ரூபாய்க்கு யூடியூப் பிரீமியம் பெறுவதற்கான லிங்க்:

https://www.youtube.com/premium?app=desktop&cc=r3svf9tt8vxnpv

பயனர்கள் மேற்கண்ட இணையதள இணைப்பிற்குச் சென்று, தங்களுடைய கணக்கு, 10 ரூபாய் பிரீமியம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதா என்பதை பார்க்கலாம். சிலருக்கு இதுவேலை செய்யவில்லை எனினும், பெரும்பாலானோருக்கு இச்சலுகை கிடைக்கிறது. 

பயனர்கள் தங்களது வங்கிக் கார்டு விவரங்களை எண்டர் செய்து, 10 ரூபாய் செலுத்த வேண்டும். 3 மாதத்திற்குப் பிறகு வழக்கமான கட்டணம் (மாதத்திற்கு 129 ரூபாய்) வசூலிக்கப்படும். மேலும், எந்த நேரத்திலும் இந்த சந்தாவை ரத்து செய்யலாம். ஒருவேளை பணம் வசூலிக்கப்பட்ட பிறகு சந்தாவை ரத்து செய்தால், பணத்தை ரீஃபண்டு செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்ஸ்டாகிராமிலும் ஹேக்கிங் கும்பல்.. உஷாரய்யா உஷாரு !

Youtube Premium என்றால் என்ன? இதனால் என்ன பலன்

YouTube Premium மூலம், விளம்பரங்களே இல்லாமல்  மில்லியன் கணக்கான வீடியோக்களைப் பார்க்கலாம். மூன்றாம் தரப்பு பேனர் விளம்பரங்கள், தேடல் தொடர்பான விளம்பரங்களையும் பார்க்க மாட்டீர்கள். ஸ்மார்ட் டிவிகள்/கேமிங் கன்சோல்கள் மற்றும் YouTube, YouTube மியூசிக் மற்றும் YouTube கிட்ஸ் மொபைல் ஆப்ஸ் உங்கள் இருப்பிடத்தில் இருந்தால், அவை அனைத்திலும் விளம்பரமில்லா வீடியோக்களைப் பார்க்கலாம். இதேபோல், விளம்பரங்கள் இல்லாமல் YouTube Musicகில் மில்லியன் கணக்கான பாடல்களையும் வீடியோக்களையும் பார்க்கலாம்.

ஆஃப்லைனில் கேட்க உங்கள் மொபைலில் பாடல்களையும் வீடியோக்களையும் பதிவிறக்கலாம் . வீடியோ இல்லாமல், ஆடியோ மட்டும் கூட கேட்கலாம்.  YouTube Originals தொடர்களையும் திரைப்படங்களையும், அவை வெளியானவுடன், கூடுதல் கட்டணம் ஏதுமின்றிப் பார்க்கலாம்.

click me!