WhatsApp பயன்படுத்த வேண்டாம்! Telegram நிறுவனர் கடும் எச்சரிக்கை

By Dinesh TGFirst Published Oct 8, 2022, 11:40 PM IST
Highlights

வாட்ஸ்அப் செயலியில் ஆபத்து இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

வாட்ஸ்அப் செயலிக்குப் போட்டியாக டெலிகிராம் செயலி இருந்து வருகிறது. மேலும், வாட்ஸ்அப்பில் இல்லாத பல அம்சங்கள் டெலிகிராமில் இருப்பதால், டெலிகிராம் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், வாட்ஸஅப்பின் தாய் தளமான, மெட்டாவின் இயங்குதளத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டைக் குறித்து டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி ‘மக்கள் தங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்தால் வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். மக்கள் எந்தவொரு மெசேஜிங் செயலியையும் பயன்படுத்தலாம், ஆனால் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த வேண்டாம். இந்த வாட்ஸ்அப் கடந்த 13 ஆண்டுகளாக ஒரு ரகசிய கண்காணிப்பு கருவியாக செயல்பட்டு வருகிறது" என்று விமர்சித்துள்ளார். 

உங்கள் பழைய ஃபோனை புதிது போல மாற்ற வேண்டுமா ? கேமர்களுக்கான சூப்பர் டிப் !

மேலும், “நான் இங்கு டெலிகிராமுக்கு மாறும்படி மக்களைத் தள்ளவில்லை. 700 மில்லியனுக்கும் அதிகமானோர் டெலிகிராமில் உள்ளனர். தினமும் 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் டெலிகிராமில் பகிரப்பட்டு வருகின்றன. இதை விட டெலிகிராமுக்கு கூடுதல் விளம்பரம் தேவையில்லை. எனவே, நீங்கள் விரும்பும் எந்த மெசேஜிங் செயலியையும் பயன்படுத்தலாம், ஆனால் வாட்ஸ்அப்பை மட்டும் பயன்படுத்த வேண்டாம், வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருங்கள்” என்று துரோவ் கூறினார் .

இன்ஸ்டாகிராமிலும் ஹேக்கிங் கும்பல்.. உஷாரய்யா உஷாரு !

நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் பரவாயில்லை, "உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு வாட்ஸ்அப்பை நிறுவியிருந்தால், அதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா செயலிகளிலுள்ள தரவையும் அணுக முடியும்" என்று எச்சரித்தார். வாட்ஸ்அப்பை பொறுத்தவரையில் கடந்த 2016 முதல், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறைபாடு கண்டறியப்படுகிறது, அதனால்தான் பாவெல் துரோவ் தனது ஸ்மார்ட்போனில் இருந்து வாட்ஸ்அபை் நீக்கினார். அதற்கு அவர் "வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்வது என்பது, உங்கள் ஸ்மார்ட்போனை அணுகுவதற்கு நீங்களே ஒரு வழியை ஏற்படுத்தி கொடுப்பது போல" என்று ஏற்கெனவே துரோவ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!