அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஷாப்பிங் தளங்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனை நடந்து வரும் நிலையில், இந்த ஆஃபர்கள் எவ்வளவு நாட்கள் இருக்கும், பொறுத்திருந்து பொருட்களை வாங்கலாமா என்பது குறித்த இங்கு காணலாம்.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தொடர்ச்சியாக வரும் பண்டிகைகள் காலங்களில் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரும்பாலான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும். அந்த வகையில், நடப்பு ஆண்டும் கடந்த 2 வாரங்களாக ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை டிவி, ஏசி, வாஷிங் மெஷின், மொபைல் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மிகமிக அதிகமான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிவி வகைகளில் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட டிவியின் விலை 8 ஆயிரம் ரூபாய் வரையில் குறைந்தது.
பெரும்பாலானோர் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினாலும், சிலர் பொறுத்திருந்து வாங்கலாம், தீபாவளி, புத்தாண்டு தினங்களில் வாங்கலாம் என்ற எண்ணத்தில் காத்திருக்கின்றனர்.
மிகக்குறைந்த விலையில் Xiaomi Redmi Pad அறிமுகம்!
இதற்கு முன்பு கடந்த ஆண்டுகளிலும் இதே போல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், புத்தாண்டின் போது பெரிய அளவில் ஆஃபர்களே இல்லை. மேலும், இந்த ஆண்டு கூட, கடந்த வாரம் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்த மிகக்குறைந்த விலை, அடுத்த சில நாட்களில் அதிகரித்து விட்டன.
அமேசானைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு முறை தயாரிப்புகளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம். எனவே, எந்தவொரு தயாரிப்பாகினும், மிகமிக குறைந்த விலையில் இருந்தால், உடனே ஆர்டர் செய்துவிடுவது சிறந்தது.
Amazon Limited Offer: இப்பவே கூட வாங்கி வச்சுக்கோங்க.. இதுதான் கடைசி வாய்ப்பு!
ஒரு தயாரிப்பின் விலை இதற்கு முன்பு எப்படி இருந்தது, தற்போது என்ன விலையில் உள்ளது, அதிகபட்ச தள்ளுபடி எவ்வளவு ரூபாயாக இருந்தது என்பது குறித்து அறிய https://www.pricebefore.com/ , https://amzdealz.net/ உள்ளிட்ட தளங்களில் பார்க்கலாம்.
மேலும், தற்போது வரவுள்ள 2023 புத்தாண்டில் இதே ஆஃபர் இருக்குமா என்பது சந்தேகமே. எனவே, நீண்ட கால உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளை இப்போதே ஆர்டர் செய்யலாம். வங்கி கார்டுகள், இன்னும் பிற கேஷ் பேக் ஆஃபர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அதிகபட்ச பணத்தை மிச்சப்படுத்தலாம்.