
இந்தாண்டு அமேசான் கிரேட் இந்தியன் சேல் கடந்த மாத இறுதியில் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த விலையில் பொருட்கள் விற்பனைக்கு வந்தது. குறிப்பாக டிவி வகைகளில் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட டிவியின் விலை 8 ஆயிரம் ரூபாய் வரையில் குறைந்தது. இந்த நிலையில், கிரேட் இந்தியன் சேல் விற்பனையை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக, எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் சேல் என்ற பெயரில் ஆஃபர் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதிலும் ஏற்கெனவே இருந்த ஆஃபர்கள் தொடர்கின்றன. அதோடு கூடுதலாக சாம்சங்கின் S 20 ஃபேன் எடிசன் ஆனது 20,000 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இதைத்தவிர வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆபர்களை அறிவித்து உள்ளது.
மிகக்குறைந்த விலையில் Xiaomi Redmi Pad அறிமுகம்!
5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, பிரத்யேகமான விற்பனை தளத்தை உருவாக்கியுள்ளது. அதில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப விலை 10,799 ரூபாயாக உள்ளது. IQOO Z6, Tecno Camon, Realme, Redmi, Oneplus உள்ளிட்ட பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன.
மேலும் கார்டு ஆஃபர்களையும், எக்கச்சக்கமான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களையும் அமேசான் அறிவித்து உள்ளது. இதில் சிட்டி பேங்க், ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி கார்டு உறுப்பினர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி விற்பனையும் உண்டு. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனை சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.