Yamaha MT15 : அசத்தல் அப்டேட்ஸ்... யமஹா MT-15 வெர்ஷன் 2.0 அறிமுகம்..! விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

By Kevin Kaarki  |  First Published Apr 11, 2022, 5:06 PM IST

யமஹா நிறுவனத்தின் புதிய MT-15 வெர்ஷன் 2.0 மாடலின் மொத்த எடை 139 கிலோ கொண்டிருக்கிறது. இதில் யமஹா நிறுவனத்தின் டெல்டா பாக்ஸ் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.


யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட MT-15 வெர்ஷன் 2.0 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் யமஹா நிறுவனத்தின் 'தி கால் ஆஃப் தி புளூ' திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. யமஹா MT-15 வெர்ஷன் 2.0 பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.

புது அப்டேட்கள்:

Tap to resize

Latest Videos

புதிய யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடலில் இன்வெர்டெட் முன்புற ஃபோர்க், 37mm இன்னர் டியூப்கள் உள்ளன. பாக்ஸ்- செக்‌ஷன் ஸ்விங் ஆர்ம் மோட்டோ ஜி.பி. சார்ந்த அலுமினியம் ஸ்விங் ஆர்ம் தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது கார்னெரிங்கின் போது மேம்பட்ட கண்ட்ரோல் வழங்குகிறது.

யமஹா நிறுவனத்தின் புதிய MT-15 வெர்ஷன் 2.0 மாடலின் மொத்த எடை 139 கிலோ கொண்டிருக்கிறது. இதில் யமஹா நிறுவனத்தின் டெல்டா பாக்ஸ் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

என்ஜின் விவரங்கள்:

யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடலில் லிக்விட் கூல்டு, 4  ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட 155சிசி ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. புதிய யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடலில் ஸ்லிக் ஷிஃப்டிங் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடலில் உள்ள 155சிசி என்ஜின் 18.4 பி.எஸ். பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

எலெக்ட்ரிக் அப்டேட்கள்:

புதிய யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடலில் புதிதாக டிசைன் செய்யப்பட்ட, முழுமையான டிஜிட்டல் எல்.சி.டி. கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கியர் ஷிஃப்ட், கியர் பொசிஷன் மற்றும் வி.வி.ஏ. இண்டிகேட்டர் போன்ற விவரங்களை காண்பிக்கிறது. 

மேலும் இதில் உள்ள எல்.சி.டி. கிளஸ்டர் கால், இ-மெயில், எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள், ஸ்மார்ட்போன் பேட்டரி ஸ்டேட்டஸ் போன்ற விவரங்களை ப்ளூடூத் சார்ந்து இயங்கும் வை கனெக்ட் செயலி மூலம் காண்பிக்கிறது. இந்த செயலி கொண்டு மோட்டார்சைக்கிளை பராமரிக்கும் டிப்ஸ்கள், பார்கிங் லொகேஷன், எரிபொருள் பயன்பாடு மற்றும் ஏராளமான விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

இதர அம்சங்கள்:

புதிய யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடலில் பை-ஃபன்ஷனல் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. பொசிஷன் லைட்கள், ஹை-ரைஸ்டு எல்.இ.டி. டெயில் லைட், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ்., முன்புறம் 282mm டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் பிரேக், 140mm ரேடியல் ரியர் டையர், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட்-ஆஃப் ஸ்விட்ச் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

நிறங்கள்:

யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடல் புதிதாக சியான் ஸ்டார்ம், ரேசிங் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர ஐஸ் ஃபுளூ வெர்மிலன் மற்ரும் மெட்டாலிக் பிளாக் போன்ற நிறங்கள் மற்றும் அசத்தலான கிராஃபிக்ஸ் உடன் கிடைக்கிறது. 

இந்திய சந்தையில் புதிய யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

click me!