2022 Maruti Suzuki XL6: இந்திய சந்தையில் புதிய எர்டிகா மாடல் அறிமுகம் செய்யப்பட்டதும், மேம்பட்ட XL6 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2022 மாருதி சுசுகி XL6 மாடலுக்கான புதிய டீசர் வெளியாகி இருக்கிறது. முதல் முறையாக புதிய 2022 XL6 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய மாருதி சுசுகி XL6 முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய மாருதி XL6 மாடல் ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் புதிய எர்டிகா மாடல் அறிமுகம் செய்யப்பட்டதும், மேம்பட்ட XL6 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அசத்தல் டீசர்:
undefined
புதிய XL6 தவிர மாருதி எர்டிகா மாடலிலும் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் வீடியோவில் மாருதி XL6 பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடல் ஏற்கனவே உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய XL6 மாடலில் டூயல் டோன் எக்ஸ்டீரியர், சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
A new way to indulge is coming. pic.twitter.com/TWBJZXVeuA
— Nexa Experience (@NexaExperience)சமீப காலங்களில் போட்டி நிறுவன கார் மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களில் சன்ரூஃப் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் மாருதி XL6 மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது எர்டிகா மாடலின் பிரீமியம் 6 சீட்டர் வேரியண்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டது.
என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விவரங்கள்:
புதிய XL6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இது முற்றிலும் புதிய K15C என்ஜின் ஆகும். இதுபோன்ற என்ஜின் மாருதி கார்களில் முதல் முறையாக பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த என்ஜின் முந்தைய K15B ரக என்ஜின்களை விட அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. XL6 மாடலில் இந்த என்ஜினுடன் புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
போட்டி:
2022 மாருதி சுசுகி எர்டிகா மாடலில் முற்றிலும் புது தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், உள்புறம் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், மேம்பட்ட அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய XL6 மாடல் கியா கரென்ஸ், ரெனால்ட் டிகரைபர், மஹிந்திரா மராசோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.