
இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் “தி கால் ஆஃப் தி புளூ” திட்டத்தின் கீழ் 155 சிசி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் மாடலான YZF-R15M இன் சர்வதேச GP 60-வது ஆனிவர்சரி எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
புது வெர்ஷன் YZF-R15M மாடலில் தங்க நிற அலாய் வீல்கள், யமஹா தொழிற்சாலை ரேஸ்-பைக் தங்க ட்யூனிங் ஃபோர்க் சின்னங்கள், கருப்பு லீவர்கள் மற்றும் 'ஸ்பீடு பிளாக்' வண்ணம் கொண்டிருக்கிறது. இதன் பியூவல் டேன்க் மீது ஸ்பெஷல் எடிஷன் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
விலை விவரங்கள்:
புதிய யமஹா YZF-R15M ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லடசத்து 88 ஆயிரத்து 300 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் 1961 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் முதன்மை தொடர் உடன் யமஹா நிறுவனத்தின் தொடர்பைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. யமஹாவின் முதல் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தின் நினைவூட்டலாக இது நிற்கிறது.
யமஹா YZF-R15M GP 60 ஆனிவர்சரி எடுஷன் மாடலில் 155cc, 4-ஸ்டிரோக், லிக்விட்-கூல்டு, SOHC, 4-வால்வு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10,000rpm இல் 18.4 பி.எஸ். பவர், 14.50 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கியர்பாக்ஸ் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
அப்டேட்ஸ்:
மேலும் இந்த மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கிளட்ச்-லெஸ் அப்ஷிஃப்ட் செய்வதற்கான விரைவு-ஷிஃப்டர், கோல்டன் அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க், புளூடூத் வசதி வழங்கும் யமஹாவின் வை கனெக்ட், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிராக் மற்றும் ஸ்ட்ரீட் என இருவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
“WGP 60வது ஆண்டு விழாவில் YZF-R15M ஆனது எங்களின் பந்தய பாரம்பரியத்தை நினைவூட்டுவதோடு, 500-க்கும் மேற்பட்ட வெற்றிகளை கொண்டாடும் ஒரு மைல்கல் ஆகும். இது பந்தயத்தின் மீதான எங்களின் நிகரற்ற ஆர்வம், விளையாட்டின் ஆற்றல் மீதான நமது நம்பிக்கை மற்றும் கிராண்ட் பிரிக்ஸ் பேடாக்கின் உறுப்பினராக மோட்டார் ஸ்போர்ட்ஸ் கலாச்சாரத்தை ஆதரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் எங்களின் அர்ப்பணிப்பின் அடையாளம் ஆகும்."
மேலும் புது மாடல்கள்:
"புதிய மைல்கல் வெர்ஷனை இந்தியாவில் உள்ள யமஹா ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். ‘தி கால் ஆஃப் தி ப்ளூ’ உத்தியின் கீழ், எதிர்காலத்திலும் இதுபோன்ற பிரத்யேக அறிமுகங்கள் மூலம் இந்தியாவில் பிரீமியம் பிரிவில் உற்சாகத்தை உருவாக்குவோம்." என யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. ஈஷின் சிஹானா தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.