வேற லெவல் அம்சங்கள்.. மிக குறைந்த விலை... புது வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Apr 14, 2022, 5:01 PM IST

இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். 


இந்தியாவை சேர்ந்த ஆடியோ நிறுவனமான போட், புதிய ஏர்டோப்ஸ் 500 ANC ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஏர்டோப்ஸ் 500 ANC மாடலில் 35db வரையிலான ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஆம்பியண்ட் மோட்,  BEAST தொழில்நுட்பம், லோ லேடென்சி ஆடியோ மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் உள்ள என்விரான்மெண்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுடபம் அழைப்புகளின் போது பயனர்களின் குரல் மற்றவர்களுக்கு தெளிவாக கேட்க செய்யும். மேலும் மற்றவர்கள் பேசுவதையும் தெளிவாக கேட்க செய்யும். மேலும் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். 

Tap to resize

Latest Videos

undefined

போட் ஏர்டோப்ஸ் 500 ANC அம்சங்கள்:

- ஹைப்ரிட் ANC தொழில்நுட்பம்
- ஆம்பியண்ட் மோட்
- 8 மில்லிமீட்டர் டிரைவர்கள்
- ENx என்விரான்மெண்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
- இன்-இயர் டிடெக்‌ஷன்
- லோ லேடன்சி பிளேபேக் வழங்கும் பீஸ்ட் மோட் 
- IWP தொழில்நுட்பம் மிக எளிமையாக இயர்பட்களை பவர் ஆன் செய்யும்
- IPX4 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட்
- டச் கண்ட்ரோல் வசதி
- 150mAh பேட்டரி (கேஸ் சேர்த்து 28 மணி நேரத்திற்கான பிளேபேக்)
- ASAP சார்ஜ் வசதி
- ஐந்து நிமிட சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்கும்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய போட் ஏர்டோப்ஸ் 500 ANC மாடல் எலைட் புளூ, டிரான்குயில் வைட் மற்றும் ரிச் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் போட் டேஸ் சிறப்பு விற்பனையின் போது இதன் விற்பனை தொடங்குகிறது. 

click me!