இவ்வளவு மைலேஜா? விழிப்புணர்வுக்காக வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் போட்டி நடத்திய யமஹா..

By Kevin Kaarki  |  First Published Apr 24, 2022, 12:41 PM IST

யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அசத்தலான போட்டியை நடத்தி, வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி உள்ளது.


ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல் வரம்பின் சிறந்த மைலேஜ் குறித்து வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியுடன், இந்தியா யமஹா மோட்டார் (IYM) செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் ‘மைலேஜ் சேலஞ்ச் நிகழ்வு’ ஏற்பாடு செய்து இருந்தது. 

மைலேஜ் சேலஞ்ச் நிகழ்வு:

Latest Videos

undefined

இந்த நிக்ச்சியில் மொத்தம் 15 யமஹா வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். யமஹாவின் 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல் வரம்பில் பசினோ 125 Fi ஹைப்ரிட், ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் உள்ளிட்ட அடங்கும். தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், யமஹாவின் எரிபொருள் திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மைலேஜை அடைவதற்கு மட்டுமல்லாமல் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன.

செயல்பாட்டின் போது, ஒவ்வொரு பங்கேற்பாளரின் ஸ்கூட்டரும் எரிபொருள் நிரப்பப்பட்டு இருக்கும். எரிபொருளை ஏற்றிய பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர்களை ஏற்கனவே தேரிவு செய்யப்பட்ட பாதையில் 30 கிலோமீட்டர்கள் வரை சவாரி செய்கிறார்கள். இது வாகனங்களின் இடைநீக்கம், சுழற்ச்சி, பிரேக்கிங், முடுக்கம் மற்றும் ஆரம்ப பிக்-அப் ஆகியவற்றை சோதனை செய்ய வழி வகுக்கிறது.

பரிசு:

டீலருக்குத் திரும்பிய பிறகு, எரிபொருள் டேங்க் மீண்டும் டாப்-அப் செய்யப்பட்டு, மைலேஜ் கணக்கீட்டிற்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் குறிப்பிடப்படும். செயல்பாட்டில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாகன 10-புள்ளி சோதனை, இலவச வாட்டர் வாஷ் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவை வழங்கப்படும். முதல் 3 வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கப்படும். 

வெற்றியாளர்:

செங்கல்பட்டில் உள்ள சமுக் பைக்குகளில் யமஹா நடத்திய மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சியில், முதல் 3 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவர்களில் முதல் வெற்றியாளர் வரலட்சுமா லிட்டருக்கு 103.2 கிலோமீட்டர் பெற்று அசத்தினார். இதை அடுத்து இரண்டாவது இடத்தை ஜெய் கணேஷ் பெற்றார். இவர் லிட்டருக்கு 99.7 கிலோமீட்டர் மைலேஜ் பெற்றார். மூன்றாவது இடத்தை நந்த குமார் பெற்றார். இவர் லிட்டருக்கு 98.8 கிலோமீட்டர் மைலேஜ் பெற்றார். 

click me!