இனி ஜாலி தான்... வாட்ஸ்அப் வெளியிடும் புது அப்டேட்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 23, 2022, 5:01 PM IST

முன்னதாக இந்த அம்சத்தில் நான்கு பேருடன் வாய்ஸ் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு, பின் அந்த எண்ணிக்கை ஏப்ரல் 2020 வாக்கில் இருமடங்கு அதிகரிக்கப்பட்டது


உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், சீரான இடைவெளியில் அப்டேட்களை வெளியிட்டு, புதுப்புது அம்சங்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது புது அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் கொண்டு ஒரே சமயத்தில் 32 பேருடன் வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் பேச முடியும். இத்துடன் பல்வேறு இதர அம்சங்களும் புது அப்டேட் மூலம் வழஙஅகப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு வாக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியின் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் பேங்கேற்போர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

புது அப்டேட்:

இத்துடன் ஒரு சாட் திரெட்-இல் அதிக பயனர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி, ரி-டிசைன் செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர், disappearing மெசேஜ்களை save செய்து கொள்ளும் ஆப்ஷன், அதிக எமோஜிக்கள், பிரைவசி செட்டிங்களில் அதிக அம்சங்கள் உள்ளிட்டவை புது பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்வோர் இனி, அதிகபட்சமாக 32 பேருடன் வாய்ஸ் கால் பேச முடியும். இதே தகவல் வாட்ஸ்அப் வலைதளத்தில் FAQ பக்கத்திலும் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த அம்சத்தில் நான்கு பேருடன் வாய்ஸ் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு, பின் அந்த எண்ணிக்கை ஏப்ரல் 2020 வாக்கில் இருமடங்கு அதிகரிக்கப்பட்டது. தற்போதைய புது அப்டேட் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.22.8.80 வெர்ஷனிலும், ஐ.ஓ.எஸ். 2.2.9.73 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு உள்ளது.

ஐ.ஓ.எஸ். மாற்றம்:

வாட்ஸ்அப் 2.22.8.80 அப்டேட்டில் க்ரூப் வாய்ஸ் கால் இண்டர்பேசுடன் சோஷியல் ஆடியோ லே-அவுட், ஸ்பீக்கர் ஹைலைட் மற்றும் வேவ்-ஃபார்ம் உள்ளிட்டவை காணப்படுகிறது. மேலும் வாய்ஸ் மெசேஜ் பபுள்ஸ் மற்றும் இன்ஃபோ ஸ்கிரீன் காண்டாக்ட் மற்றும் க்ரூப்  உள்ளிட்டவைகளுக்கான டிசைன்களையும் மாற்றி அமைத்து இருக்கிறது. தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷில் வழங்கப்பட்டு இருப்பதை அடுத்து, விரைவில் ஸ்டேபில் அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படும்.

ஆண்ட்ராய்டு:

இதுதவிர வாட்ஸ்அப் 2.22.10.7 ஆண்ட்ராய்டு வெர்ஷனின் டிகாயிங் எடிட்டரில் ரி-டிசைன் செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு API பயன்படுத்தி பயனர்களின் லொகேஷனை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையிலான ஸ்டிக்கர்களை வழங்க இருக்கிறது. லொகேஷன் ஸ்டிக்கர் அம்சம் ஏற்கனவே ஸ்னாப்சாட் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே செயல்படும் என தெரிகிறது. இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

click me!