ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி நிறுவனம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அம்சங்களை பொருத்த வரை புதிய ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 ஃபிளாக்ஷிப் பிராசஸர், 12GB ரேம், 256GB இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட்போனில் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த மாடலில் 8 லேயரில் வெப்பத்தை குறைக்கும் பிரத்யேக ஸ்டிரக்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.
undefined
புகைப்படங்களை எடுக்க ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யு.ஐ. 3 கொண்டிருக்கும் ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி GT 2 அம்சங்கள்:
- 6.62 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz E4 AMOLED ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 ஃபிளாக்ஷிப் பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.5
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 65W அல்ட்ரா ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங்
விலை விரங்கள்:
புதிய ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மர்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் ஸ்டீல் பிளாக், பேப்பர் கிரீன் மற்றும் பேப்பர் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.