ஒரு வாரத்தில் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்... யாஹூ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

By Narendran S  |  First Published Feb 10, 2023, 10:30 PM IST

ஒரே வாரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது.


ஒரே வாரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ளனர். அந்த வகையில் கூகுல் நிறுவனம் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதேபோல், டிவிட்டர், மெட்டா, பேஸ்புக், அமேசான், மைக்ரோசாப்ட், டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டனர்.

இதையும் படிங்க: Twitter Blue சந்தா இந்தியாவில் அறிமுகம்! இனி நீங்களும் ப்ளூ டிக் வாங்கலாம்!!

Latest Videos

undefined

அந்த வகையில் தற்போது யாஹூ (Yahoo) நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 2000-களில் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ கூகுல் வருகைக்கு பின் பெரிய அளவில் பயனர்களால் பயன்படுத்தபடுவதில்லை. சில நாடுகளில் மட்டும் யாஹூ பயன்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. யாஹூ நிறுவனம் இ மெயில் உள்ளிட்ட மேலும் சில மென்பொருள் சேவைகளையும் வழங்கி வருகிறது. 

இதையும் படிங்க: இனி WhatsApp மூலமாகவே நோட்ஸ் எடுக்கலாம், போன் கால்களுக்கு அலாரம் வைக்கலாம்!

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக ஒரு வாரத்தில் 1000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது. இது யாஹூவின் மொத்த பணியாளர்களில் 12 சதவீதம் என கூறப்படுகிறது. மேலும் இந்த பணிநீக்க நடவடிக்கை இந்த ஆண்டு இறுதி வரை தொடர உள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் யாஹூ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

click me!