இந்தியாவில் கட்டண முறையிலான டுவிட்டர் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் எவ்வளவு, இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
டுவிட்டரில் இதுவரையில் பெரிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு மட்டுமே ப்ளூ டிக் குறியீடு வழங்கப்பட்டு வந்தது. இது அதிகாரப்பூர்வ, உறுதிசெய்யப்பட்ட கணக்கு என்பதை குறிக்கும் குறியீடு ஆகும். எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை கைப்பற்றிய பிறகு, கட்டண முறையில் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார். இது வரையில் இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் டுவிட்டர் ப்ளூ சந்தா கிடைத்து வந்தது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் கட்டண முறையிலான டுவிட்டர் ப்ளூ சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள், ப்ளூ சந்தாவுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு பயனர்கள் போன் நம்பர் மட்டும் இருந்தாலே போதும் என்று கூறப்படுகிறது. இந்த சந்தாவுக்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் 900 ரூபாய் என்ற வகையில் டுவிட்டர் ப்ளூ சந்தா வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக பிளாக் பதிவில் கிடைத்த தகவலின்படி, இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், யுகே, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் Twitter Blue வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, இந்தியாவில் உள்ள Android மற்றும் iOS பயனர்கள் இருவரும் உறுப்பினர்களை வாங்கலாம்.
இருப்பினும் மற்ற நாடுகளில் உள்ள ட்விட்டர் பயனர்கள் ட்விட்டர் ப்ளூ சந்தாவை இணையப் பதிப்பு வழியாகவும் பெறலாம், இந்த முறை தற்போதைக்கு இந்தியாவில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறு இன்டர்நெட் மூலம் பெறப்படும் ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை மாதத்திற்கு ரூ.650 என்றும், பயனர்கள் வருடாந்திரத் திட்டத்தைப் பெற்றால், ட்விட்டர் ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை ஆண்டுக்கு ரூ.6,800 (அதாவது மாதத்திற்கு ரூ.566.67) என்றும் வசூலிக்கப்படும்.
WhatsApp செயலியில் பல்வேறு வசதிகள் அறிமுகம்! முழு அப்டேட் இதோ!!
Twitter Blue மூலம் வேறு என்ன கிடைக்கும்?
நீல நிற பேட்ஜ் தவிர, Twitter Blue ஆனது குறைவான விளம்பரங்கள், நீண்ட இடுகைகளை பார்க்கும் வசதி கிடைக்கிறது. மேலும், ஏதாவது புதிதாக ஒரு அம்சம் வந்தால், முன்கூட்டியே ப்ளூ சந்தாதாரர்களுக்கு அது வழங்கப்படும். ஸ்பேம் மெசேஜ்களை தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மிகமுக்கியமாக, ப்ளூ சந்தாவில் உள்ளவர்கள் ட்வீட்டை பதிவிட்ட பிறகு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ட்வீட்களை வெளியிட்ட 30 நிமிடங்களுக்குள் ஐந்து முறை வரை திருத்த முடியும். பயனர்கள் Full HD வீடியோக்களைப் பகிரலாம்.