
இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதில் மோட்டோரோலா நிறுவனம் நற்பெயர் பெற்றுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களில் இல்லாத அளவுக்கு தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது யாரும் எதிர்பார்க்க முடியாதபடிக்கு, மிகக்குறைந்த விலையில் Moto E13 என்று ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Moto E13 ஸ்மார்ட்போனின் விலை வெறும் 6,999 ரூபாய் ஆகும். அன்றாட தேவைகளுக்கு தரமான ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது நல்லதொரு தேர்வாக அமையும். பிரவுசிங் செய்தல், வாட்ஸ்அப் பயன்படுத்துதல், வீடியோக்களை பார்த்தல் போன்றவற்றுக்கு தொய்வில்லாமல் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால், பட்ஜெட் விலையில் ஆரம்பநிலை ஸ்மார்ட்போன் வேண்டும் என்பவர்கள் Moto E13 ஸ்மார்ட்போனை தாராளமாக கருதலாம்.
இதில் 2ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.6,999 என்றும், 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட், மோட்டோ ஸ்டோர்கள் மூலம் இந்த போனை ஆர்டர் செய்யலாம். போன் வாங்கிய 15 நாட்களுக்குள் ஜியோ நெட்வொர்க்கைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.700 கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்துவிட்டது OnePlus 11 5G.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
Moto E13 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்: