போகோ வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த POCO X5, POCO X5 Pro 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை, சிறப்பம்சங்கள், ஆஃபர்கள் குறித்த முழு விவரங்களை இங்குக் காணலாம்.
POCO X5 5G:
போகோ X5 ஸ்மார்ட்போனில் 6.67″ FHD+ அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், 4096 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 695 SoC பிராசசர், 6GB ரேம் உள்ளன. போனின் முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல், அதில் 13MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
ஃபோன் வெறும் 7.98mm தடிமன் கொண்டது. இயங்குதளத்தைப் பொறுத்தவரையில் MIUI 13, ஆண்ட்ராய்டு 12 உள்ளது. 48MP பிரைமரி சென்சார் கோண்ட பின்புற கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 2MP மேக்ரோ வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 5000mAh பேட்டரி, அதற்கு ஏற்ப 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பது சிறப்பும்.
POCO X5 5G ஸ்மார்ட்போனானது கருப்பு, பச்சை, நீலம் என மூன்று வண்ணங்களில் வருகிறது. 6GB + 128GB மாடலின் விலை $249 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 20,585) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் 8GB + 256GB ரேம் மாடலின் விலை $299 (தோராயமாக ரூ. 24,720) ஆகும்.
POCO X5 5G Pro:
POCO X5 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகியுள்ளது. இதில், 6.67-இன்ச் FHD+ Xfinity அமோலெட் டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரெப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்லிங் ரேட் ஆகியவை உள்ளன. ஸ்னாப்டிராகன் 778G SoC பிராசசர், 8GB வரையிலான ரேம், ஆண்ட்ராய்டு 12 , MIUI 14 ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
2 வருடத்திற்கு OS அப்டேட்டுகளும், 3 வருடத்திற்கு பாதுகாப்பு அப்டேட்டும் கிடைக்கும் என்று போகோ தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
சாம்சங் HM2 சென்சார் கொண்ட 108MP சென்சார் இந்த போனில் உள்ளது, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளது. 16MP முன் கேமரா உள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளது, இது 15 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம் மற்றும் 46 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poco X5 Pro இன்று அறிமுகம்.. எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்!
POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனானது மூன்று வண்ணங்களில் வருகிறது மற்றும் இதன் விலை ரூ. 6GB + 128GB ரேம் மாடலுக்கு ரூ.22,999 என்றும், 8GB + 256GB ரேம் மாடலின் விலை ரூ.24,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.