சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், Samsung Galaxy S22 விலை பெருமளவு குறைந்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புத்தம் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதில் கேலக்ஸி S23, S23+, S23 அல்ட்ரா என மூன்று விதமான போன்கள் உள்ளன. எஸ் சீரிஸ் என்பது சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பதால், அதற்கு ஏற்ப விலையும் தாறுமாறாக எகிறி உள்ளது. இந்தியாவில் 8ஜிபி ரேம், 128 ஜிபி ரேம் வேரியண்ட் என்ற ஆரம்ப விலை 75 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இந்த நிலையில், சாம்சங்கின் முந்தைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி் S22 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. S22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 72,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் விலை இப்போது ரூ.57,999 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், Flipkart வழியாக இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்கும் போது இன்னும் விலை குறைவாகப் பெறலாம். இந்த விலை 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கானது.
undefined
சாம்சங் கேலக்ஸி எஸ் 22 வாங்கலாமா?
Samsung Galaxy S22 ஒரு பழைய 5G ஸ்மார்ட்போன் ஆகும். சிறந்த கேமரா அமைப்பு, வேகமான செயல்திறன் கொண்ட ஃபிளாக்ஷிப் போன் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த ஸ்மார்ட்போனை தாராளமாக கருதலாம். இதில் உள்ள சாப்ட்வேருக்கு நீண்ட காலம் அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் தரப்பில் உறுதியளிக்கப்ப்பட்டுள்ளது. எனவே, எப்படியும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு OS அப்டேட், ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும்.
S22 ஐ வாங்குவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள Galaxy S23 போனானது, அப்படியே S22 ஸ்மார்ட்போனை போல தான் உள்ளது, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் ரேட்டிங், 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 6.1-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா போன்ற அம்சங்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன.
அடுத்த வாரம் அறிமுகமாகும் Realme Coca-Cola ஸ்மார்ட்போன்.. பரிசுகள், ஆஃபர்கள் அறிவிப்பு!
புதிய கேலக்ஸி எஸ்23 வேகமான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 பிராசசர், 3,900எம்ஏஎச் பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது, ஆனால் இது சராசரி பயனர்களுக்கு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஒரளவு கச்சிதமான டிசைன் விரும்பும் மக்கள் Galaxy S22 பயன்படுத்தலாம். ஆனால் அதில் சில குறைபாடுகளும் உள்ளன. பேட்டரி சிறியதாக உள்ளதால், அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.