moto e13 பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்! எவ்வளவு ரூபாய்?

By Dinesh TG  |  First Published Feb 3, 2023, 12:42 PM IST

இந்தியாவில் வரும் பிப். 8 ஆம் தேதி மோட்டோ e13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதிலுள்ள சிறப்பம்சங்கள், எதிர்பார்க்கப்படும் விலை குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


கடந்த வாரம் உலகளாவிய அளவில் மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி e சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் moto e13 போனை அறிமுகப்படுத்தப்படுவதை மோட்டோரோலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது .

2 ஜிபி ரேம் பதிப்பைத் தவிர, போனின் 4 ஜிபி ரேம் பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த, இரண்டும் ஆண்ட்ராய்டு 13 கோ பதிப்பில் வரும். 

Tap to resize

Latest Videos

undefined

அடுத்த வாரம் அறிமுகமாகும் Realme Coca-Cola ஸ்மார்ட்போன்.. பரிசுகள், ஆஃபர்கள் அறிவிப்பு!

moto e13 சிறப்பம்சங்கள்:

  • திரை: 6.5-இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) HD+ 20:9 விகிதம் LCD திரை, 84% ஸ்கிரீன் அளவு
  • பிராசசர்:  Octa-Core Unisoc T606 (2x A75 1.6GHz + 6x A55 1.6GHz) 12nm பிராசசர் உள்ளது. மாலி-G57 MC2 650MHz GPU
  • ரேம் அளவு: 2ஜிபி / 4ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு, மைக்ரோ எஸ்டி மூலம் 1டிபி வரை விரிவாக்கக்கலாம்
  • ஆண்ட்ராய்டு: ஆண்ட்ராய்டு 13 (Go பதிப்பு)
  • சிம் வகை: இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
  • கேமரா: 13MP பின்புற கேமரா, 5MP முன் கேமரா
  • ஆடியோ போர்ட்: 3.5மிமீ ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ்
  • பரிமாணங்கள்: 164.19 x 74.95 x 8.47mm; எடை: 179.5 கிராம்
  • பாதுகாப்பு: ஸ்பிளாஸ் எதிர்ப்பு (IP52)
  • பிற அம்சங்கள்: டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS, USB Type-C, NFC 
  • சார்ஜிங்: 10W சார்ஜிங், 5000mAh பேட்டரி
     
click me!