ஒன்பிளஸ் பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த OnePlus 11 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையா விவரங்களை இங்குக் காணலாம்.
கடந்த டிசம்பரம் மாதம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனான OnePlus 11 5G அறிமுகம் செய்வது குறித்த விவரங்களை வெளியிட்டது. OnePlus நிறுவனம் உறுதியளித்தபடியே தற்போது OnePlus 11 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த. ஃபோன் 2K, 6.7-இன்ச் அளவிலான டிஸ்பளேவுடன் வருகிறது. இதில் குறிப்பாக டால்பி விஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC பிராசசரும், 16GB வரை LPDDR5X ரேம், 256GB மெமரி வசதிகளுடன் வருகிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்காகவே ஹைபர் பூஸ்ட் கேமிங் இன்ஜின் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மெஷின் லேர்னிங் ஜிபிஏ பிரேம் ரேட் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி உட்புகுத்தப்பட்டு, கற்றல் திறன் மேம்படுத்துவதாக ஒன்பிளஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 13, OxygenOS 13 இருப்பதாகவும், அடுத்த 4 வருடத்திற்கு OS அப்டேட்டுகள் கிடைக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 வருட செக்யூரிட்ட அப்டேட் வரும் என்பது ஏற்கெனவே உறுதி செய்துள்ளது.
கேமராவைப் பொறுத்தவரையில், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் bசானி IMX890 சென்சார் கொண்ட 50MP பிரைமரிகேமரா, OIS தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32MP IMX709 2x டெலிஃபோட்டோ கேமரா, ஹசல்பேலட் போட்ரைட் மோட் வசதிகளும் உள்ளன. IMX581 சென்சார் கொண்ட 48MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. மேலும், மேக்ரோ ஷாட்களும் எடுக்கலாம்.
OnePlus 11 ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், அதற்கு ஏற்ப 5000mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளன. இது 10 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகிவிடும் என்றும், 25 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இதில் வயர்லெஸ் சார்ஜிங்கான வசதி கிடையாது.
POCO X5 5G, X5 Pro 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் முழுவிவரங்கள்!
விலை மற்றும் விற்பனை தேதி:
OnePlus 11 5G ஸ்மார்ட்போனானது டைட்டன் பிளாக், எட்டர்னல் கிரீன் ஆகிய நிறங்களில் வருகிறது. இதன் விலை ரூ. 8GB + 128GB மாடலுக்கு 56,999 என்று அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16GB + 256GB மாடலின் விலை ரூ. 61,999 ஆகும். இன்று முதல் Amazon.in , OnePlus ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஆர்டர் செய்யலாம். பிப்ரவரி 14 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.