வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றவும், போன் கால்களை செடியூல் செய்யவும் வகையில் புதிய அப்டேட் வருகிறது.
வாட்ஸ்அப் செயலியை அலுவல் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதிலுள்ள வசதியை இன்னும் மேம்படுத்தும் விதமாக, தற்போது இரண்டு புதிய அம்சங்கள் வரவுள்ளன. இது பயனர்களின் அனுபவத்தை பெரிய அளவில் மேம்படுத்தும். ஏற்கெனவே ஒரிஜனல் பிக்சல் தரத்தில் படங்களைப் ஷேர் செய்யும் அம்சமும் வரவுள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது, அடுத்த முயற்சியாக வாட்ஸ்அப் கால்களை செடியூல் (நேரத்தை திட்டமிடும்) அம்சம், வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றும் அம்சம் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக WaBetaInfo தளத்தில் சில விவரங்கள், ஸ்கிரீன்ஷாட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதை வைத்து பார்க்கும் போது, செடியூல் செய்யும் வசதி கொண்டு வரப்படுகிறது. இது நீங்கள் ஒருவருக்கு கால் செய்யும் போது, ஒரு அட்டவணை ஆப்ஷன் காட்டப்படும். அதை கிளிக் செய்தால், நீங்கள் எப்போது கால் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிடலாம். அதில் தலைப்பு, தேதி மற்றும் நேரம் ஆகிய ஆப்ஷன்களை பயன்படுத்தி கால் செய்யும் விவரத்தை குறித்து கொள்ளலாம்.
இந்த கால் செடியூல் அம்சமானது அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். மீட்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு வாட்ஸ்அப் ஒரு ரிமைன்டர் அனுப்பும். கால் தொடங்கும் போது பயனர்களுக்கு அறிவிக்கப்படும். எனவே யாராவது கால் செய்ய மறந்துவிட்டால் கூட, இந்த அம்சம் அவர்களுக்கு ஞாபகபடுத்தும்.
Twitter Blue சந்தா இந்தியாவில் அறிமுகம்! இனி நீங்களும் ப்ளூ டிக் வாங்கலாம்!!
இதேபோல், மற்றொரு அம்சம் வாய்ஸ் மெசேஜ்களை அப்படியே எழுத்துக்களாக மாற்றி படிக்க முடியும். ஆனால், இந்த அம்சம் ஆங்கில மொழிக்கு மட்டுமே கிடைக்கும். எனவே, வேறு மொழியில் வாய்ஸ் மெசேஜ் வந்தால் அது வேலை செய்யாது. WhatsApp இன் சமீபத்திய iOS பீட்டா பதிப்பில் இந்த அம்சம் காணப்பட்டது. அனைத்து அம்சங்களும் தற்போது சோதனை முயற்சியில் உள்ளன. இவை வாட்ஸ்அப்பின் பீட்டா 2.23.4.4 ஆண்ட்ராய்டு பதிப்பில் சோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.