Amazon Offer: ஷாவ்மி ஸ்மார்ட்போனகளுக்கு ரூ.12 ஆயிரம் வரை ஆஃபர்!

By Dinesh TG  |  First Published Nov 22, 2022, 4:05 PM IST

ஷாவ்மியின் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்களுக்கு எவ்வளவு ரூபாய் தள்ளுபடி உள்ளது என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


அமேசானில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது எக்கச்சக்க ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகளுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு, எந்த ஆஃபரும் பெரிதாக வரவில்லை. இந்த நிலையில், ஷாவ்மி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல சலுகையில் உள்ளன. அதன்படி, ஷாவ்மி 11 லைட், ஷாவ்மி 11T ப்ரோ, ஷாவ்மி 12T ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாய் வரை குறைத்து வாங்கிக்கொள்ளலாம். 

Xiaomi 11 Lite NE 5G 8+128

Tap to resize

Latest Videos

Xiaomi 11 Lite NE 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை 34 ஆயிரம் ரூபாய் ஆகும். இது  தற்போது ஆஃபரில் 25 ஆயிரம் ரூபாய்க்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வங்கிக் கார்டுகளின் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கினால், கூடுதலாக ரூ. 4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இஎம்ஐ மூலமாக வாங்கும் போது 7 ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபர் உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக ரூ. 34 ஆயிரத்துக்கு அறிமுகமான ஷாவ்மி 11 லைட் ஸ்மார்ட்போனை, எல்லா ஆஃபர்களையும் பயன்படுத்தும்போது, 18 ஆயிரம் ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். 

ஸ்லிம்மான எடை குறைவான ஸ்மார்ட்போன் ஆகும். இதன் எடை வெறும் 158 கிராம் மட்டுமே உள்ளது. 10 பிட் அமோலெட் டிஸ்ப்ளே, டால்பி விஷன், ஸ்னாப்டிராகன் 778, 12 5ஜி பேண்டுகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. குறைந்த விலையில், நல்ல 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். 

Xiaomi 11T Pro 8+128

Xiaomi 11T Pro 8+128 ஸ்மார்ட்போனின் அசல் விலை 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இது  தற்போது ஆஃபரில் 35 ஆயிரம் ரூபாய்க்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வங்கிக் கார்டுகளின் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கினால், கூடுதலாக ரூ. 4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இஎம்ஐ மூலமாக வாங்கும் போது 8 ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபர் உள்ளது.

ஷாவ்மி 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம், 128 ஜிபி வேரியண்டுக்கு இது ஒரு நல்ல சலுகை விலை ஆகும். இதில் ஸ்னாப்டிராகன் 888, 120W ஹைபர் சார்ஜ், டால்பி விஷன், டால்பி அட்மாஸ், ஆண்ட்ராய்டு 11 ஆகியவை உள்ளன. பேட்டரியைப் பொறுத்தவரையில் 5000 mAh சக்தி கொண்ட பேட்டரி இருப்பதாகவும், வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரத்திற்குள் iPhone 13 வாங்கலாம்.. எப்படி? இப்படி..

Xiaomi 12 Pro 8+256

Xiaomi 12 Pro  ஸ்மார்ட்போனின் அசல் விலை 80 ஆயிரம் ரூபாய் ஆகும். இது  தற்போது ஆஃபரில் 54 ஆயிரம் ரூபாய்க்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வங்கிக் கார்டுகளின் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கினால், கூடுதலாக ரூ. 8,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இஎம்ஐ மூலமாக வாங்கும் போது மேலும், கூடுதல் ஆஃபர் உள்ளது. 

மேற்கண்ட ஆஃபர்கள் நவம்பர் 26 ஆம் தேதி வரையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஷாவ்மி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 

click me!