புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் பேட்ச் வால், யு.ஐ. கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஓ.எஸ்.-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ஸ்மார்ட் டி.வி. 5A சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாசடல்கள் 32 இன்ச் HD ரெடி, 40 இன்ச் மற்றும் 43 இன்ச் FHD மாடல்கள் வடிவில் கிடைக்கின்றன. இவற்றில் ஹாரிசான் டிஸ்ப்ளே மற்றும் மிக சிறிய பெசல்கள் உள்ளன. இரு ஸ்மார்ட் டி.வி. மாடல்களிலும் விவிட் பிக்ச்சர் என்ஜின், நேர்த்தியான ஸ்கிரீன் கேலிபிரேஷ் வழங்க ஏதுவாக மென்பொருள் மற்றும் வன்பொருள் டுவீக் செய்யப்பட்டு உள்ளன.
புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் பேட்ச் வால், யு.ஐ. கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஓ.எஸ்.-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர் அதிகம் விரும்பும் தரவுகளை நாளடைவில் பரிந்துரை செய்யும். இத்துடன் Mi குவிக் வேக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பாதியில் நிறுத்திய திரைப்படங்களை மீண்டும் அதே இடத்தில் இருந்தபடி தொடர முடியும்.
undefined
ஆண்ச்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் பில்ட்-இன் குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, டேட்டா சேவர் அம்சமும் கொண்டிருக்கின்றன.
சியோமி ஸ்மார்ட் டி.வி. 5A 32 / 40 / 43 அம்சங்கள்
- 32 இன்ச் 1366x768 பிக்சல் HD LED டிஸ்ப்ளே மற்றும் 178-டிகிரி வியூவிங் ஆங்ரில், ALLM
- 40 / 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே, 178-டிகிரி வியூவிங் ஆங்கில், ALLM
- குவாட் கோர் கார்டெக்ஸ் A55 பிராசஸர்
- மாலி G31 MP2 GPU
- 1.5GB (40 மற்றும் 43) / 1GB (32) ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு டி.வி. 11 மற்றும் பேட்ச் வால், Mi குயிக் வேக்
- வைபை, ப்ளூடூத் 5, 2 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெச், ஆப்டிக்கல், AUX போர்ட்
- AV1, H.265, H.264, H.263, VP8/VP9/VC1, MPEG1/2/4 சப்போர்ட்
- 24W (40 மற்றும் 43) / 20W (32) ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, DTS:X | DTS Virtual: X (40 மற்றும் 43)
புதிய சியோமி ஸ்மார்ட் டி.வி. 5A 32 இன்ச் HD ரெடி டி.வி. மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என்றும் 40 இன்ச் FHD மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் 43 இன்ச் FHD மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது டி.வி. மாடல்கள் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.