இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4700mAh பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ நிறுவனம ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புது ஐகூ ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், 12GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4700mAh பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.
undefined
ஐகூ Z6 ப்ரோ 5ஜி அம்சங்கள்:
- 6.44 இன்ச் 2404x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G 6nm பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 6GB / 8GB ரேம், 128GB மெமரி
- 12GB LPDDR5 ரேம், 256GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா, f/1.79, LED ஃபிளாஷ்
- 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP 4cm மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4700mAh பேட்டரி
- 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஃபேண்டம் டஸ்க் மற்றும் லீஜியன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், குறுகிய காலக்கட்டத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது.