Xiaomi 11i : ஒரு நாள் விற்பனையிலேயே இப்படியா? புது சாதனை படைத்த சியோமி

By Nandhini Subramanian  |  First Published Jan 19, 2022, 5:26 PM IST

அந்த ஸ்மார்ட்போன் மூன்று வாரங்களில் எட்டிய லாபத்தை சியோமி 11i ஸ்மார்ட்போன் ஒரே நாளில் வசூலித்து இருக்கிறது.


சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 11i சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ரெட்மி நோட் 11 சீரிஸ் பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதிக எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 11i ஸ்மார்ட்போன் இந்திய விற்பனையில் புது சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சியோமி இந்தியா டுவிட்டர் அக்கவுண்டில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்தியவில் புதிய சியோமி 11i ஸ்மார்ட்போன், முந்தைய Mi 10i ஸ்மார்ட்போன்கள் ஒரு வாரம் முழுக்க விற்பனையான யூனிட்களை விட அதிகமாக விற்பனையாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

அறிமுகம் செய்யப்பட்ட போது இந்திய சந்தையில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் Mi 10i ஸ்மார்ட்போன் அறிமுகமானது. விற்பனை துவங்கிய முதல் மூன்று வாரங்களில் ரூ. 400 கோடி மதிப்பிலான Mi 10i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனையானதாக சியோமி அறிவித்து இருந்தது. தற்போதைய சியோமி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பின் படி சியோமி 11i ஸ்மார்ட்போன்களின் விற்பனை மூலம் அந்நிறுவனம் அதிக தொகையை ஈட்டி இருக்கும் என்றே தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போன் மூலம் "ஹைப்பரசார்ஜ் ரெவல்யூஷன்" ஏற்படுத்தி இருப்பதே இத்தகைய வரவேற்புக்கு காரணமாக இருக்கும் என சியோமி கருதுகிறது. இந்திய சந்தையில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிவேகமாக சார்ஜ் ஆகும் மாடலாக சியோமி 11i இருக்கிறது. இதில் உள்ள 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள 4500mAh பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய்ய 15 நிமிடங்களே ஆகும். 

பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் மட்டுமின்றி சியோமி Mi 10i ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 சிப்செட், FHD+ 6.67 ஃபிளாட் AMOLED பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், 108MP பிரைமரி கேமரா, 8MP+2MP கேமரா சென்சார்கள், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய சியோமி 11i ஸ்மார்ட்போனின் விலை ரூ. 26,999 என துவங்குகிறது. 

click me!