இந்த பென் டேப்லெட் மீது பொருத்தினால் காந்த சக்தியால் இணைந்து கொண்டு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகனஅ 860 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட் சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் பென் கொண்டு நோட்ஸ் எடுப்பது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இந்த பென் டேப்லெட் மீது பொருத்தினால் காந்த சக்தியால் இணைந்து கொண்டு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. புதிய சியோமி பேட் 5 மாடல் 8720mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி பேட் 5 அம்சங்கள்:
- 11 இன்ச் 2560x1600 WQXGA 16:10 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- 2.96GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 860 7nm பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6GB LPDDR4X ரேம்
- 128GB / 256GB UFS 3.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
- 13MP பிரைமரி கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்கள்
- வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் டி
- 8,720mAh பேட்டரி
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் 128GB மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சியோமி பேட் 5 விற்பனை அமேசான், Mi ஹோம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை மே 3 ஆம் தேதி துவங்குகிறது. மே 7 ஆம் தேதி வரை சியோமி பேட் 5 மாடல் 128GB மெமரி மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.